ஆப்நகரம்

அடுத்த கட்ட படப்பிடிப்பிற்கு டெல்லி கிளம்பிய ரஜினிகாந்த்!

நடிகர் ரஜினிகாந்த் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக இன்று மாலை டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

Samayam Tamil 16 Jul 2018, 7:09 pm
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக இன்று மாலை டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
Samayam Tamil rajinikanth


ரஜினி காந்த் அரசியலில் ஈடுபடப் போவதாக தெரிவித்த நிலையில், அடுத்தடுத்து படங்களில் நடித்துக் கொண்டுதான் உள்ளார்.

அந்த வகையில் காலா , 2.0 படம் உருவாகி வந்தன. காலா படம் வெளியான அந்த நாளே, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான புதிய படத்திற்கான படப்பிடிப்பில் கலந்து கொள்ள ரஜினி காந்த் டார்ஜிலிங் சென்றார்.முதல் கட்ட படப்பிடிப்பை டார்ஜிலிங்கில் முடித்த ரஜினி, சென்னை திரும்பினார்.

இந்நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக நடிகா் ரஜினிகாந்த் மாலை 5.25 மணிக்கு சென்னையிலிருந்து விஸ்தாரா என்ற தனியாா் பயணிகள் விமானத்தில் டில்லி புறப்பட்டு சென்றாா். டில்லியிலிருந்து டேராடூன் சென்று திரைப்பட படப்பிடிப்பில் கலந்து கொள்வாா் என்று கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்