ஆப்நகரம்

கனடாவில் வெளியீட்டுக்கு முன்பு ரூ.11 லட்சம் வரையில் வசூல் குவித்த பேட்ட!

கனடா பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ரஜினியின் பேட்ட படம் தான் அதிக வசூல் குவிக்கும் என்று இந்த தகவல் நிரூபிக்கிறது.

Samayam Tamil 8 Jan 2019, 5:23 am
கனடா பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ரஜினியின் பேட்ட படம் தான் அதிக வசூல் குவிக்கும் என்று இந்த தகவல் நிரூபிக்கிறது.
Samayam Tamil rajini


இயக்குனர் ஷங்கரின் 2.0 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கார்த்திக் சூப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் பேட்ட. ரஜினியுடன் இணைந்து விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், த்ரிஷா, நவாசுதீன் சித்திக், சனந்த் ஷெட்டி, ஆடுகளம் நரேன், குரு சோமசுந்தரம், யோகி பாபு, சசிகுமார், விவேக் பிரசன்னா, ராமசந்திரன் துரைராஜ், தீபக் பரமேஸ், மேகா ஆகாஷ் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இளம் இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 10ம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளது.

Also Read This: கூகுள் தேடுதலில் தப்பு தப்பாக காட்டும் பேட்ட, விஸ்வாசம் ரிலீஸ் தேதி!

Also Read This: பிரிவியூ ஷோ பாக்க மறுப்பு: படத்த தியேட்டர்ல பாத்துக்குறேன்: நயன்தாரா!


இதே போன்று தான் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படமும் வரும் 10ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது. குடும்பக் கதையை மையப்படுத்திய இப்படத்தில் நயன்தாரா, தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், யோகி பாபு, ஜெகபதி பாபு, பேபி அனிகா, ரமேஷ் திலக், நாராயண் லக்கி, விஜய், விவேக் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், கனடாவில் 3 பகுதிகளில் 9 காட்சிகளின் மூலம் படம் வெளியாவதற்கு முன் விற்பனையில் ரூ. 11,71,490.75 (22,380 டாலர் – சி.ஏ.டி) வரையில் வசூல் செய்துள்ளது. ஆனால், விஸ்வாசம் 3 பகுதிகளில் 7 காட்சிகளின் மூலம் ரூ.4,30,279 (8,220 டாலர் – சி.ஏ.டி) வரையில் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிரீமியர் ஷோவிற்கு டிக்கெட் விலை ரூ.1046 (20 டாலர் – சி.ஏ.டி) என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனினும், இரு படங்களுமே முதல் நாளில் அதிக வசூல் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்