ஆப்நகரம்

Rajinikanth: ரஜினிக்கும், லதாவுக்கும் பிபியைை எகிற வைத்த நாராயணன்

Rajiniakanth about salt: உப்பு அதிகாமகவோ அல்லது குறைவாகவோ சாப்பிட்டால் என்னவாகும் என்பதை ரஜினி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Authored byஷமீனா பர்வீன் | Samayam Tamil 12 Mar 2023, 3:02 pm
Superstar Rajinikanth's kutty story: ருசியான சாப்பாடு கிடைத்த சந்தோஷத்தில் அதை சாப்பிட்டு பிபி எகிறிய கதையை தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.
Samayam Tamil superstar rajinikanths salt and bp kutty story
Rajinikanth: ரஜினிக்கும், லதாவுக்கும் பிபியைை எகிற வைத்த நாராயணன்


​ரஜினி​

Rajinikanth: மீண்டும் இஸ்லாத்திற்கு மாறும் ரஜினி: ஆனால் பெரிய சம்பவமாம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் உடல்நலத்தில் அதிகம் கவனம் செலுத்தக் கூடியவர். சாப்பாட்டு விஷயத்திலும் கட்டுப்பாடாக இருப்பார். ஷூட்டிங்ஸ்பாட்டில் அவர் சாப்பிடுவதை பார்த்து, என்ன சார், காசு பணம் இருந்தும் இப்படி சாப்பிடுகிறீர்களே என பரிதாபப்பட்டவர்கள் உண்டு. அந்த அளவுக்கு ருசிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் உப்பு பற்றி பேசியிருக்கிறார் ரஜினி.



​உப்பு​

ரஜினி கூறியதாவது, உப்பை பற்றி என் தனிப்பட்ட அனுபவத்தை சொல்கிறேன். வேறு ஒன்றும் இல்லை. நீங்க நிறைய சரக்கு போட்டால். சாரி, சரக்குனு சொன்னா இங்க நிறைய பேருக்கு புரியாது. நிறைய ஆல்கஹால் போட்டால் லிவர் பாதிக்கும். நிறைய தம் அடிச்சா, சிகரெட் அடிச்சா நுரையீரல் மட்டும் பாதிக்கும். நிறைய ஆயில் ஐட்டம், கொழுப்புள்ள ஐட்டம் போன்றவற்றை சாப்பிட்டால் இதயம் பாதிக்கப்படும். ஆனால் உப்பு கிடையாது. உப்பு ஜாஸ்தியாகிவிட்டால் அனைத்து உறுப்புகளும் பாதிக்கப்படும் என்றார்.

​பவர்​

ரஜினி மேலும் கூறியதாவது, உப்புக்கு அவ்வளவு பவர் இருக்கிறது. சாப்பாட்டில் காரம், மசாலா, அது, இதுனு போட்டாலும் கொஞ்சம் உப்பு போட்டால் எல்லாம் போயிடும், உப்பு மட்டும் தான் தெரியும். உப்பை குறைக்கக் கூடாது. உப்பை குறைத்தாலும் தப்பு தான். என் மனைவி ஒரு திருமண விழாவுக்கு சென்றிருந்தார். அங்கு சாப்பாடு ரொம்ப சூப்பராக இருந்திருக்கிறது. யார் அது அந்த சமையல்காரர் என்று கேட்டிருக்காங்க. நாராயணன் என்று சொல்லியிருக்கிறார்கள் என்றார்.

Mamta Mohandas:அவ நடிச்சா நான் நடிக்க மாட்டேனு சொன்னார் நயன்தாரா: மம்தா மோகன்தாஸ் அதிர்ச்சி தகவல்

​சமையல்​

எங்கள் வீட்டில் இருந்த சமையல்காரர் அப்பொழுது இல்லை. அவருக்கு உடம்புக்கு சரியில்லை. நம்ம வீட்டுக்கு குக்கா வருகிறீர்களானு கேட்டிருக்காங்க. சரி கரும்பு சாப்பிடுவதற்கு கூலியா கொடுக்கணும்னு, அந்த குக் நம்ம வீட்டிற்கு வந்துவிட்டார். சூப்பராக சமைக்கிறார், செம டேஸ்ட். அந்த மாதிரி டேஸ்ட் நான் சாப்பிட்டதே இல்லை என்றார் ரஜினி.

​பிபி​

இப்படியே சாப்பிட்டுக்கிட்டிருந்தோம். எனக்கும், மனைவிக்கும் பிபி ஏறிக் கொண்டே இருந்தது. என்னடானு பார்க்கிறோம், டாக்டர் டெஸ்ட் எல்லாம் பண்றார். ஆனால் எங்க ரெண்டு பேருக்கும் பிபி ஏறிக்கிட்டே தான் இருக்கு. அதுக்கப்புறம் ஒரு நண்பர் வந்திருந்தார். அவரை சாப்பிட வீட்டிற்கு வருமாறு அழைத்தேன். அவரும் வந்து சாப்பிட்டார். எப்படி இருக்கு சாப்பாடுனு கேட்டேன் என ரஜினி தெரிவித்தார்.

​நண்பர்​

மத்தவங்களும் என் வீட்டில் சாப்பிட்டிருக்காங்க. ஆனால் உப்பு ஜாஸ்தியா இருக்கு, ஆயில் ஜாஸ்தியா இருக்குனு சொல்ல முடியாதுல. நல்லா இருக்குனு சொல்வாங்க. நண்பர் முகத்திற்கு நேராகவே சொல்லிட்டான். என்னடா இவ்வளவு உப்பு இருக்கு, இவ்வளவு ஆயில் இருக்கு, எப்படி சாப்பிடுறீங்கனு கேட்டான். நாங்க அதை தான் வருஷக்கணக்கா சாப்பிட்டுக்கிட்டு இருந்தோம். அப்புறம் உடனே கூப்பிட்டு மாத்தினேன். அதன் பிறகே பிபி கம்மியானது. உப்பு பழகிட்டால் தெரியாது. மத்தவங்க சொன்னால் தான் தெரியும் என ரஜினி கூறினார்.

எழுத்தாளர் பற்றி
ஷமீனா பர்வீன்
டிஜிட்டல் ஊடகத்தில் தமிழ் சமயம் ஊடகத்தில் சினிமா செய்திகளை அளித்து வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். முன்னதாக நாட்டு நடப்பு, லைஃப்ஸ்டைல், ஸ்போர்ட்ஸ் செய்திகள் அளித்தவர்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்