ஆப்நகரம்

பத்மாவதி படத்தை வெளிநாடுகளில் வெளியிடலாம்: உச்சநீதிமன்றம்

பத்மாவதி திரைப்படத்தை வெளிநாடுகளில் திரையிடுவதற்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது .

TNN & Agencies 28 Nov 2017, 4:20 pm
பத்மாவதி திரைப்படத்தை வெளிநாடுகளில் திரையிடுவதற்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது .
Samayam Tamil supreme court dismiss case padmavathi ban case
பத்மாவதி படத்தை வெளிநாடுகளில் வெளியிடலாம்: உச்சநீதிமன்றம்


ராஜபுத் என்று கூறப்படும் வம்சத்தினரை தவறாக சித்தரிக்கும் காட்சிகள் பத்மாவதி திரைபடத்தில் இடம்பெற்றிருப்பதாகக் கூறி, இந்தத் திரைப்படத்தை நாடு முழுவதும் திரையிட இந்து மதவாத அமைப்புகள் தெரிவித்து வருகின்றனர்.

ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஹரியானா உள்ளிட்ட ‌பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாநில பாரதிய ஜனதா தலைவர்களும் இந்தத் திரைப்படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என்று தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் வெளிநாடுகளிலும் இத்திரைப்படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க கோ‌ரி, எம்.எல். சர்மா என்பவர் உச்ச‌ நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ‌அடங்கிய அமர்வு முன் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய தணிக்கைக் குழு இந்தத் திரைப்படம் குறித்து இறுதி முடிவை எடுக்காத நிலையில், ஏன் இத்தகைய மனுக்களை தாக்கல் செய்கிறீர்கள்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பி, மனுவை தள்ளுபடி செய்தனர்.

அத்துடன் உயர் பதவியில் உள்ள கட்சி தலைவர்கள் இத்தகைய கருத்துகளை வெளியிடுவது தவறு என்று நீதிபதிகள் விமர்சித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்