ஆப்நகரம்

“நயன்தாரா திருமணத்திற்கு நிச்சயம் போவேன்!” – சிம்பு ஓபன் டாக்

“நயன்தாரா திருமணத்திற்கு நிச்சயம் போவேன்!” – சிம்பு ஓபன் டாக்

TOI Contributor 18 Nov 2016, 11:42 am
சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. விமர்சன ரீதியாகவும், வசூலிலும் சாதனை படைத்துள்ள இந்தப்படத்திற்காக சிம்புவும், இயக்குநர் கௌதம் மேனனும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். படத்தின் வெற்றி குறித்து பேட்டி அளித்த சிம்பு அச்சம் என்பது மடமையடா வெற்றி மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார். போட்டி போட்டு நடிக்கும் எண்ணம் இல்லை என்றும், ரசிகர்களுக்கு நல்ல படங்களை கொடுக்கும் நோக்கில் இனி நடிக்க இருப்பதாகவும் கூறினார்.
Samayam Tamil surely i will attend nayanthara marriage says simbu
“நயன்தாரா திருமணத்திற்கு நிச்சயம் போவேன்!” – சிம்பு ஓபன் டாக்


மேலும் நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் அடுத்த வருடம் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, திருமணத்திற்கு செல்வீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் என் நெருங்கிய நண்பர்கள். அவர் அழைத்தால் நிச்சயமாக திருணத்திற்கு செல்வேன் என்று கூறி இருக்கிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்