ஆப்நகரம்

‘தென்னிந்திய’ என்பதற்கு பதிலாக ’தமிழ்நாடு’ என்று மாற்ற வேண்டும் – சுரேஷ் காமாட்சி

தமிழ் சினிமாவில் தென்னிந்திய என்று தொடங்கும் அனைத்து தமிழ் சங்கங்களும் தமிழுக்கு மாற வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது என்று தயாரிப்பாளரும், இயக்குனருமான சுரேஷ் காமாட்சி கூறியுள்ளார்.

Samayam Tamil 12 Sep 2016, 10:55 pm
தமிழ் சினிமாவில் தென்னிந்திய என்று தொடங்கும் அனைத்து தமிழ் சங்கங்களும் தமிழுக்கு மாற வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது என்று தயாரிப்பாளரும், இயக்குனருமான சுரேஷ் காமாட்சி கூறியுள்ளார்.
Samayam Tamil suresh kamatchi urged change the name of nadigar sangam
‘தென்னிந்திய’ என்பதற்கு பதிலாக ’தமிழ்நாடு’ என்று மாற்ற வேண்டும் – சுரேஷ் காமாட்சி


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ் திரைத்துறையில் தென்னிந்திய என்று தொடங்கும் அனைத்து யூனியன்களும், சங்கங்களும் தமிழகத்தில் தான் வாழ்கிறோம் எனும் உணர்வு இருந்தால் உடனடியாக தென்னிந்திய என்பதற்கு பதிலாக தமிழ்நாடு என்று மாற்ற வேண்டும். இவற்றை மாற்றினால் போதும், வேறு வழியில் போராடத் தேவையில்லை என்று கூறியுள்ளார்.



தமிழகத்தின் மெய்யப்பச் செட்டியாரும், எஸ்.எஸ். வாசனும் தானமாக கொடுத்த இடத்தில் தான் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தற்போது செயல்பட்டு வருகிறது. அவர்கள் கொடுத்த இடத்தில் செயல்படும் அமைப்புக்கு தமிழ்நாடு திரைப்பட சபை என்று பெயர் சூட்டப்பட வேண்டும்.



கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தானமாகக் கொடுத்த 4 ஏக்கர் நிலத்தை இன்றைக்கு நடிகர் சங்கம், எங்கள் நிலம், எங்கள் சொத்து என்று கூறி வருகின்றனர். அவர் கொடுத்த இடத்துக்கு இன்று சொந்தம் கொண்டாடும் நடிகர் சங்க நிர்வாகிகள் சங்கத்தின் பெயரை தமிழ்நாடு நடிகர்கள் சங்கம் என்று மாற்ற முடியாது என பிடிவாதம் பிடிக்கின்றனர்.



சூப்பர் ஸ்டாரை விட எனக்கு ஒரு சதவிகிதமாவது தமிழுணர்வு அதிகம் இருக்கிறது என்று கூறும் நாசரோ சௌத் இண்டியன் ஆர்டிஸ்ட் அஸோஸியேசன் என புதிதாக ரப்பர் ஸ்டாம்ப் அடித்திருக்கிறார். காவிரி பிரச்னைக்காக கர்நாடகம் நடத்தும் அனைத்தும் போராட்டங்களிலும் நடிகர் ரமேஷ் அரவிந்த் கலந்து கொண்டு தன் உணர்வைக் காட்டுகிறார். அதே ரமேஷ் அரவிந்த் தமிழ்நாட்டில் நடக்கும் காவிரி போராட்டங்களில் பங்கேற்க அழைத்தால் வருவாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார். அபப்டியிருக்கும் போது தென்னிந்திய நடிகர் சங்கம் என்று பெயர் எதற்கு என கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்