ஆப்நகரம்

சூர்யா - விக்னேஷ் சிவன் கூட்டணியில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ டீசர்!

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

TNN 30 Nov 2017, 7:42 pm
சென்னை: சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
Samayam Tamil suriya keerthys new movie tsk teaser released
சூர்யா - விக்னேஷ் சிவன் கூட்டணியில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ டீசர்!


’நானும் ரௌடி தான்’ படத்தை இயக்கிய விக்னேஷ் சிவனின் அடுத்த படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இதில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், செந்தில், கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இவரது இசையில் வெளியான ‘சொடுக்கு மேல சொடுக்கு போடுது’ என்ற பாடல் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது.



இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார். இதன் இசையை சோனி மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

Suriya, Keerthy's new movie TSK teaser released.

அடுத்த செய்தி

டிரெண்டிங்