நவரசா ஆந்தாலஜியில் வரும் காதல் கதையில் நடித்துள்ளார் சூர்யா. இந்நிலையில் அவரும், பிரக்யா மார்டினும் இருக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது. சூர்யாவை பார்த்தால் ஏதோ காலேஜ் பையன் மாதிரி இளமையாக தெரிகிறார். ஜோதிகா அண்ணியிடம் சொல்லி சுத்திப் போடச் சொல்லுங்கள் அண்ணா என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த கெட்டப்பில் சூர்யா, கார்த்தி அருகே நின்றால் அவரின் தம்பி போன்று இருப்பார். கார்த்தி பாவம் தான். அண்ணன் செம டஃப் கொடுக்கிறார் என்று ரசிகர்கள் பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
நவரசா ஆந்தாலஜியில் கவுதம் மேனன் இயக்கியிருக்கும் கிடார் கம்பி மேல நின்று என்கிற காதல் கதையில் தான் சூர்யா நடித்திருக்கிறார். காதலை சொல்வதில் கவுதம் மேனனை அடித்துக்கொள்ள முடியாது. கவுதம் மேனன், சூர்யா கூட்டணி சேர்ந்தாலே அது தனி அழகு தான். அதனால் கிடார் கம்பி மேல நின்று கதையை பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.
நவரசா ஆந்தாலஜி ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் நாளை ப்ரொமோ வீடியோவை வெளியிடுகிறார்கள்.
படங்களை பொறுத்தவரை பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா 40 படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. சூர்யாவின் பிறந்தநாளான ஜூலை 23ம் தேதி சூர்யா 40 படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கிறார். கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்ட சூர்யா அண்மையில் தான் தன் மனைவி ஜோதிகாவுடன் சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு மற்றவர்களையும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு ஊக்குவித்தார்.