ஆப்நகரம்

GR Gopinath Biopic: ’ஏர் டெக்கன்’ கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கும் சூர்யா

நடிகர் சூர்யாவின் 38வது படத்தை ‘இறுதிச்சுற்று’ படப் புகழ் சுதா கோங்குரா இயக்குகிறார். இப்படம் பிரபல தொழிலதிபர் கோபிநாத் குறித்த வாழ்க்கை வரலாற்று படமாக தயாராகவுள்ளது. இதில் அண்மையில் ஆஸ்கர் விருது வென்ற குனீத் மோங்கா இணைந்துள்ளார்.

Samayam Tamil 4 Mar 2019, 5:43 pm
இந்தியாவில் ஏழை எளிய மக்களும் பயன்பெறும் வகையில் விமான சேவையை முதன்முதலாக தொடங்கியவர் கோபிநாத். இவரது ’ஏர் டெக்கன்’ நிறுவனம், ஊரக மற்றும் கிராமப் புற பகுதி மக்களும் விமானத்தில் செல்லும் பொருட்டு விமானச் சேவையை வழங்க தொடங்கியது.
Samayam Tamil இறுதிச்சுற்று இயக்குநருடன் கைக்கோர்க்கும் சூர்யா..!


அதனடிப்படையில், இந்தியாவின் குறைந்த கட்டணத்தில் விமானச் சேவையை வழங்கிய முதல் நிறுவனம் என்ற பெயரையும் ‘ஏர் டெக்கன்’ பதிவு செய்தது. இதற்கு காரணமாக இருந்தவர் பிரபல தொழிலதிபரும், முன்னாள் ராணுவ வீரருமான ஜி.ஆர். கோபிநாத்.

இவரது சாதனை மற்றும் சேவைகளை போற்றும் விதமாக இந்திய அரசு பல்வேறு விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது. மேலும், பிரான்ஸ் நாட்டில் சேவாலியர் விருது பெற்ற சில இந்தியர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொழிலதிபர் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. இதை ‘இறுதிச்சுற்று’ படப் புகழ் சுதா கோங்குரா இயக்குகிறார். இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


சூர்யாவின் 38-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். பாடலாசிரியர் விவேக் பாடல்களை எழுதுகிறார். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்தில் குனீத் மோங்கா இணைந்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இவர் சமீபத்தில் சிறந்த குறும்படத்திற்கான ஆஸ்கார் விருதை வென்ற பீரியட் எண்ட் ஆஃப் சென்டன்ஸ் படத்தை தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்