ஆப்நகரம்

'காக்க காக்க' பட ரிலீஸ் சமயத்தில் பிரியங்கா செய்து கொண்டிருந்த காரியம்: ஷாக்கான சூர்யா..!

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'எதற்கும் துணிந்தவன்' படம் வரும் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Samayam Tamil 5 Mar 2022, 7:36 pm
சூரரைப் போற்று படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. இந்தப்படத்தில் ஹீரோயினாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். இந்நிலையில் இந்தப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பிரியங்கா குறித்து சூர்யா தெரிவித்துள்ள விஷயம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil Suriya - Priyanka
Suriya - Priyanka


பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'எதற்கும் துணிந்தவன்' படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். மேலும் இந்தப்படத்தில் நடிகர் சத்யராஜ், திவ்யா, வினய், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, சுப்பு பஞ்சு, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அண்மையில் 'எதற்கும் துணிந்தவன்' படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததாக படக்குழுவினர் அறிவித்தனர். இந்நிலையில் இந்தப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சூர்யா பிரியங்கா பற்றி பேசும் போது, படப்பிடிப்பு தளத்தில் ஒரு நாள் பிரியங்கா மோகன் என்னிடம் வந்து 'காக்க காக்க' படம் எனக்கு ரொம்பவும் பிடிக்கும் நான் உங்களுடைய மிகப்பெரிய ரசிகை என கூறினார்.

கோடி கோடியாய் வசூலை குவிக்கும் 'வலிமை': உச்சகட்ட கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!
அப்போது தனியாக சென்று பிரியங்காவிடம் காக்க காக்க படம் ரிலீஸ் ஆகும்போது உங்களுக்கு என்ன வயது எனக் கேட்டதற்கு அப்பொழுது பிரியங்கா மோகன் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்ததாக கூறியுள்ளார். இதனைக் கேட்ட நடிகர் சூர்யா அதிர்ச்சியடைந்துள்ளார். காக்க காக்க படம் ரிலீசான போது மூன்றாவது படித்து கொண்டிருந்த சிறுமி தற்போது சூர்யா ஜோடியாக நடித்துள்ளதை கேள்விப்பட்டு ரசிகர்களும் ஷாக்கில் உள்ளனர்.

'ஜெய் பீம்' படத்தை தொடர்ந்தும் 'எதற்கும் துணிந்தவன்' படத்திலும் சமூக பிரச்சனையை சூர்யா கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பொள்ளாச்சி சம்பவத்தை மையமாக வைத்து இந்தப்படம் உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 'எதற்கும் துணிந்தவன்' படம் வரும் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்