ஆப்நகரம்

சூர்யாவின் சூரரை போற்று புது ரிலீஸ் தேதி இதுவா?

சூரரை போற்று படம் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆகவுள்ளது என ரிலீஸ் தேதி பற்றி புதிய தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 23 Apr 2020, 7:27 pm
சூர்யாவின் அடுத்த ரிலீஸ் சூரரை போற்று. இறுதிச்சுற்று புகழ் சுதா கொங்கரா இயக்கியுள்ள இந்த படம் ஏப்ரல் மாதத்தில் ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டது. விஜய்யின் மாஸ்டர் படத்திற்கு போட்டியாக சூரரை போற்று ரிலீஸ் ஆகிறது என்றும் கூறப்பட்டது.
Samayam Tamil Soorarai Pottru


ஆனால் தற்போது கொரோனா இந்த இரண்டு படங்களையும் தள்ளிப்போக வைத்துள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் கொரோனா வைரஸ் பரவுவது குறைந்து நிலைமை சீரான பிறகு தான் அவை திறக்கப்பட வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் சூரரை போற்று படம் வரும் ஆகஸ்ட் மாதத்தில் ரிலீஸ் ஆகவுள்ளது என்று தகவல் பரவி வருகிறது. சுதந்திர தின ஸ்பெஷலாக ஆகஸ்ட் 15ம் தேதி அந்த படம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது.

இருப்பினும் இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை. கொரோனா லாக்டவுன் முடிந்தபிறகு தயாரிப்பு நிறுவனம் புது ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யாவின் 2டி நிறுவனம் மற்றும் குனீத் மோங்கா இருவரும் இணைந்து தயாரித்துள்ள இந்த படம் ஜி.ஆர்.கோபிநாத் என்பவரது வாழ்க்கை வரலாறு தான்.

சமீபத்தில் சூரரை போற்று படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டிருந்தது. அதில் 19 வயது கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக சூர்யா மிகவும் கஷ்டப்பட்டு இருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்