ஆப்நகரம்

மாஸாக இருக்கும் சூரரைப் போற்று ட்ரெய்லர்: படம் நவம்பர் 12ம் தேதி ரிலீஸ்

சூரரைப் போற்று படத்தின் ட்ரெய்லரை அறிவித்தபடி வெளியிட்டுள்ளார்கள்.

Samayam Tamil 26 Oct 2020, 10:12 am
ஏர் டெக்கன் நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை சூரரைப் போற்று என்கிற பெயரில் படமாக எடுத்துள்ளனர். சுதா கொங்கரா இயக்கியுள்ள சூரரைப் போற்று படத்தில் கோபிநாத் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார்.
Samayam Tamil soorarai pottru


பெரிதும் எதிர்பார்க்கப்படும் சூரரைப் போற்று படத்தை அக்டோபர் 30ம் தேதி ஓடிடியில் வெளியிட முடிவு செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டார்கள். ஆனால் சில சான்றுகள் வாங்குவதில் சிக்கல் ஏற்படவே , படத்தை திட்டமிட்டபடி ரிலீஸ் செய்ய முடியவில்லை.

இது குறித்து சூர்யா விரிவான கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் இந்திய விமானப்படையிடம் இருந்து NOC சான்று கிடைத்துள்ளது. இந்நிலையில் சூரரைப் போற்று படத்தின் ட்ரெய்லர் 26ம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்து சூர்யா வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அறிவித்தபடி இன்று ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ட்ரெய்லரில் ஏர் ஓட்டுறவனும் ஏரோபிளேனுல போவான் என்று சூர்யா சொல்கிறார். சாதிக்க வேண்டும் என்கிற ஆசையில் சூர்யா படும் வேதனைகளை ட்ரெய்லரில் அழகாக காண்பித்துள்ளனர்.

இந்த படத்திற்காக சூர்யா உடல் ரீதியாகவும் கஷ்டப்பட்டிருப்பது தெரிகிறது. ட்ரெய்லரின் இறுதியில் சூரரைப் போற்று படம் நவம்பர் மாதம் 12ம் தேதி வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி அடுத்தடுத்து அப்டேட் கிடைப்பது சூர்யா ரசிகர்களை குஷியாக்கியுள்ளது.

Nayanthara நீட், சாமியார், மதம், ஓட்டு: மூக்குத்தி அம்மன் ட்ரெய்லரே சும்மா அதிருது

தீபாவளி ஸ்பெஷலாக சூரர் மட்டும் இல்லை ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் படமும் வெளியாகவிருக்கிறது. அந்த படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. ட்ரெய்லரை பார்த்த அனைவரும் அசந்துவிட்டனர். இது தியேட்டரில் ரிலீஸாகியிருக்க வேண்டிய படம் என்று ரசிகர்கள் ஃபீல் செய்துள்ளனர்.

சூரரைப் போற்று ட்ரெய்லர் குறித்து அறிவிப்பு வெளியான வேகத்தில் சூர்யா 40 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. சூர்யா 40 படத்தை பாண்டிராஜ் இயக்க, சன் பிக்சர்ஸ் தயாரிக்கவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்