ஆப்நகரம்

சென்னை2 சிங்கப்பூருக்கு கொடி காட்டிய சூர்யா..!

நடிகர் சூர்யா, ‘சென்னை 2 சிங்கப்பூர்’ இசை பயணத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

TNN 13 Aug 2016, 6:04 pm
நடிகர் சூர்யா, ‘சென்னை 2 சிங்கப்பூர்’ இசை பயணத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
Samayam Tamil suriya starts chennai to singapore music journey
சென்னை2 சிங்கப்பூருக்கு கொடி காட்டிய சூர்யா..!


சென்னை 2 சிங்கப்பூர் படத்தின் இசை பயணத்தை நடிகர் சூர்யா இன்று சென்னையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சினிமா வரலாற்றில் புதியதொரு சாதனையை படைக்க தயாராகிவிட்டார் ‘சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான்.

ஜிப்ரான் இசையமைத்திருக்கும் ‘சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தின் ஆறு பாடல்களை சென்னை உட்பட ஆறு நாடுகளில் சாலை வழியே பயணித்து வெளியிட இவர்கள் முடிவு செய்துள்ளார். அந்த வரலாறு படைக்கும் பயணத்தை இன்று சென்னையில் நடிகர் சூர்யா கொடி அசைத்து ஆரம்பித்து வைத்தார். இந்த பயணத்திற்கு முன்னதாக ‘சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தின் டீசரும், ஆறு பாடல்களில் முதல் பாடலான ‘வாடி வாடி’ என்ற பாடலையும் சென்னை சத்யம் திரையரங்கில் படக்குழுவினர் விமர்சையாக வெளியிட்டனர்.

இந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளர் கே.அனந்தன் (காமிக்புக் பிலிம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிட்டட்), இயக்குனர் அப்பாஸ் அக்பர், இசையமைப்பாளர் ஜிப்ரான், முன்னணி கதாபாத்திரங்கள் கோகுல் ஆனந்த், அஞ்சு குரியன், ராஜேஷ் பாலச்சந்திரன், எம்சி ஜீஸ், ஒளிப்பதிவாளர் கார்த்திக் நல்லமுத்து, படத்தொகுப்பாளர் கே.எல்.பிரவீன் மற்றும் இணை தயாரிப்பாளர் ஷபீர் ஆகியோர் பங்குபெற்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்