ஆப்நகரம்

அடுத்தடுத்து இந்திக்கு போகும் சூர்யா - கார்த்தி படங்கள்!

சூர்யாவின் சூரரைப் போற்று படமும் இந்தியில் ரீமேக் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 24 Feb 2020, 5:05 pm
சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கும் சூரரைப் போற்று திரைப்படம் தமிழ் புத்தாண்டு நாளில் வெளியாகவுள்ளது. இந்த படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி ஆர் கோபிநாத் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட கதையாக உருவாகியுள்ளது. இந்த படம் ரசிகர்கள் மட்டுமின்றி, பொதுமக்களிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil suriya


காரணம் இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியீட்டை, படக்குழு செய்த செயல் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இந்த படத்தை, இந்தி தயாரிப்பாளர்களும் , முன்னணி நடிகர்களும் கவனித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தான், சூர்யாவின் சூரரைப் போற்று படம் இந்தியில் ரீமேக் ஆகும் என்கிற பேச்சு எழுந்துள்ளது. இதுகுறித்து பேட்டி ஒன்றில் கூறிய தயாரிப்பாளர் குனீத் மோங்கா, சூரரைப் போற்று படத்தை இந்தியில் ரீமேக் செய்யவுள்ளதாகவும், சூர்யாவே நடிப்பாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

சூரரைப் போற்று படத்தில் சூர்யா நெடுமாறன் ராஜாங்கம் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அபர்ணா பாலமுரளி அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில், மோகன் பாபு, ஜாக்கி ஷெராப், கருணாஸ், காளி வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

முன்னதாக, கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படமும் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கார்த்தி நடித்த கைதி கதாபாத்திரத்தில், பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. தம்பி படத்தைத் தொடர்ந்து அண்ணன் படமும் இந்திக்கு போவதை பற்றி கோலிவுட்டில் பரவலாக பேசி வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்