ஆப்நகரம்

விக்னேஷ் சிவனைத் தொடர்ந்து ராஜூமுருகன் இயக்கத்தில் சூர்யா!!!

நடிகர் சூர்யா ‘குக்கூ’, ‘ஜோக்கர்’ஆகிய படஙகளை இயக்கிய ராஜூமுருகன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.

Samayam Tamil 20 Sep 2016, 12:38 am
ஹரி இயக்கத்தில் ‘சிங்கம் 3’ படத்தில் நடித்து வரும் சூர்யா, அடுத்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கிறார். அதன்பினர் ராஜூமுருகன் இயக்கும் படத்திலும் நடிக்கவுள்ளாராம்.
Samayam Tamil surya acting in rajumurugan direction
விக்னேஷ் சிவனைத் தொடர்ந்து ராஜூமுருகன் இயக்கத்தில் சூர்யா!!!


நடிகர் சூர்யா, ‘எஸ் 3’ படத்தை முடித்தபின், பா. ரஞ்சித் இயக்கத்திலும், முத்தையா இயக்கத்திலும் நடிப்பார் என்று முன்னரே அறிவிக்கப்பட்டது. ‘எஸ் 3’ படத்திற்குப்பிறகு சூர்யா முத்தையா படத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது. தற்போது ‘எஸ் 3’ படத்திற்குப்பிறகு நயன்தாரா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் படத்திற்கு கால்ஷீட் கொடுத்துள்ளார் சூர்யா.

இப்படத்தைத் தொடர்ந்து ராஜூமுருகன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளாராம். இந்தப் படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. ஆகையால் முத்தையா படத்தில் நடிப்பது இப்போதைக்கு இல்லை என்று தெரிகிறது. மேலும் சூர்யா 2017ம் ஆண்டு நேரடி தெலுங்கு படங்களில் நடிக்கவுள்ளாராம். படத்தை இயக்குனர் திரிவிக்ரம் இயக்கவுள்ளாராம். இந்தப்படத்திற்கான வேலைகள் இப்போதே ஆரம்பிக்கப்படவுள்ளதாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்