ஆப்நகரம்

தந்தையின் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடும் சூர்யா,கார்த்தி

நடிகர் சிவகுமாரின் 75-வது பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாட அவரது மகன்களான பிரபல நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் முடிவெடுத்துள்ளனர்.

TNN 22 Oct 2016, 2:54 am
நடிகர் சிவகுமாரின் 75-வது பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாட அவரது மகன்களான பிரபல நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் முடிவெடுத்துள்ளனர்.
Samayam Tamil surya and karthi will celebrate his father sivakumar brithday
தந்தையின் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடும் சூர்யா,கார்த்தி


பழம்பெரும் நடிகரான சிவக்குமார் வரும் 27-ம் தேதி தனது 75-வது பிறந்தநாள் கொண்ட்டாடுகிறார். இந்த ஆண்டு சினிமா உலகில் சிவக்குமார் அடியெடுத்து வைத்த 50-வது ஆண்டாகவும் அமைந்துள்ளதால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள லலித் கலா அகாடமி கலைக்கூடத்தில் சிவக்குமார் வரைந்த ஓவியங்களை கண்காட்சியாக்க இவரது மகன்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

வரும் 24-ம் தேதி திறந்து வைக்கப்படும் இந்த கண்காட்சி வரும் 26-ம் தேதிவரை நடைபெறவுள்ளது. சிவக்குமாரின் கைவண்ணத்தில் உருவான 140 ஓவியங்களை இந்த கண்காட்சியில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இரண்டு சிறிய புத்தகங்களும் வெளியிடப்படுகின்றன.

சிவக்குமார் நடித்த பல படங்கள் தொடர்பான அரிய புகைப்படங்களும், சில முக்கிய தகவல்களும் இந்த புத்தகங்களில் இடம்பெறுகிறது. மேலும், சிவக்குமார் ஆற்றிய பத்து முக்கிய சொற்பொழிவு காட்சிகளும் டி.வி.டிக்களாக வெளியாகவுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்