ஆப்நகரம்

‘மாறலாம் மாற்றலாம்’ என்ற குறும்படத்தில் நடிகர் சூர்யா!

நடிகர் சூர்யா, தற்போது ‘மாறலாம் மாற்றலாம்’ என்ற குறும்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

Samayam Tamil 9 Mar 2019, 1:48 pm
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. தற்போது இவர் தமிழக அரசுடன் கைகோர்த்துள்ள பிளாஸ்டிக் தடை குறும்படத்தில் நடித்துள்ளார். இந்த குறும்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரித்துள்ளது.
Samayam Tamil surya


இவ்வருடம் ஜனவரி 1 ஆம் தேதி பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்தது. அதன் பின்னர் பிளாஸ்டிக் பயன்பாடு ஓரள்வுக்குக் குறைந்துள்ளது. ஆனால் முற்றிலும் குறையவில்லை. எனவே பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமைகள் குறித்து குழந்தைகளுக்கு எடுத்துரைப்பது போல் அந்தக் குறும்படம் உள்ளது.

’மாறலாம் மாற்றலாம்’ என்ற பெயரில் நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனத்தின் யூ-டியூப் பக்கத்தில் இந்தக் குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த குறும்படத்தை ஹரீஸ் என்பவர் இயக்கியுள்ளார்

அடுத்த செய்தி

டிரெண்டிங்