ஆப்நகரம்

சூர்யா நடித்துவரும் “தானா சேர்ந்த கூட்டம்” இந்திப்பட தழுவலா?

சூர்யா நடித்துவரும் “தானா சேர்ந்த கூட்டம்” இந்திப்பட தழுவலா?

TOI Contributor 10 Jun 2017, 8:57 pm
சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ இந்தியில் வெளியான ‘ஸ்பெஷங் 26’ என்ற படத்தில் தழுவலாக இருக்கக்கூடும் என்று பலரும் கூறி வருகின்றனர்.
Samayam Tamil suryas thaana serndha kootam remake of hindi movie
சூர்யா நடித்துவரும் “தானா சேர்ந்த கூட்டம்” இந்திப்பட தழுவலா?


விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், சிவகுமார், சத்யன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படம், இந்தியில் வெளியான ‘ஸ்பெஷல் 26’ படத்தின் தழுவலாக உருவாகி வருகிறது என்கிறார்கள்.

ஆனால், அந்தப் படத்தின் ரீமேக் உரிமை, இயக்குநர் தியாகராஜனிடம் இருக்கிறதாம். அதனால், அந்தப் படம்தான் இந்தப் படம் என்று தெரியாமல் இருக்க, ஒரு உத்தியைக் கையாண்டிருக்கிறார்களாம். இந்திப் படத்தில் பாடல்களே கிடையாது. ஆனால், இந்தப் படத்தில் 8 பாடல்களை வைத்து அந்தப் படத்துக்கும் இந்தப் படத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறி வருகிறது படக்குழு..

அடுத்த செய்தி

டிரெண்டிங்