ஆப்நகரம்

ராமராஜன் பட இயக்குனர் சிராஜ் மரணம்

சுயம்வரம் படத்தை இயக்கிய இயக்குனர் சிராஜ் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

TNN 25 Jul 2017, 10:13 am
சுயம்வரம் படத்தை இயக்கிய இயக்குனர் சிராஜ் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
Samayam Tamil suyamvaram director siraj passes away
ராமராஜன் பட இயக்குனர் சிராஜ் மரணம்


ராமராஜன் நடிப்பில் வந்த என்னைப் பெத்த ராசா, தங்கத்தின் தங்கம், ராஜாங்கம், கின்னஸ் சாதனை படைத்த சுயம்வரம், ஊரெல்லாம் உன் பாட்டு ஆகிய படங்களை இயக்கியவர் சிராஜ்.

சென்னை அசோக் நகரில் வசித்து வந்த அவர் கடந்த சில நாட்களாக நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சிராஜ் நேற்றிரவு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். அவரது மரணம் குறித்து தகவலறிந்த திரைத்துறையினர் சிராஜ்ஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை சிராஜ்ஜின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்