ஆப்நகரம்

ரஜினி அமெரிக்கா போனது சூதாடத்தானா?: சு.சாமி கேள்வி

மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு என்ற சொல்லிக்கொண்டு நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்று சூதாட்டத்திற்காத்தானா? என்று பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

TNN 6 Jul 2017, 11:46 am
மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு என்ற சொல்லிக்கொண்டு நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்று சூதாட்டத்திற்காத்தானா? என்று பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
Samayam Tamil swamy tweets photo of rajinikanth gambling in casino wants ed probe
ரஜினி அமெரிக்கா போனது சூதாடத்தானா?: சு.சாமி கேள்வி


மும்பையில் ‘காலா’ படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், சில நாட்கள் ஓய்வுக்குப் பிறகு மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு சிகிச்சை பெற்ற பின், அடுத்த வாரம் அவர் சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது.

இதனிடையே, அமெரிக்காவில் சூதாட்ட விடுதி ஒன்றில் ரஜினி அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியானது. வைரலாக பரவிய இந்த படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் ரஜினியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
Wow! RK 420 in a US Casino gambling to improve his health!! ED must find out from where his $$ came from. pic.twitter.com/4UeUgg9yNN — Subramanian Swamy (@Swamy39) July 5, 2017 இந்நிலையில், ரஜினியின் சூதாட்ட விடுதி விசிட் பற்றி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார். “வாவ்! 420 ரஜினிகாந்த் அமெரிக்கா சென்று சூதாட்ட விடுதியில் வைத்து மருத்துவ சிகிச்சை பெறுகிறார். அமலாக்கத்துறை அவரிடம் இருக்கும் பணம் எப்படி வந்தது என்று விசாரிக்க வேண்டும்.” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்