ஆப்நகரம்

இப்போ எல்லாமே போலி.. 90ஸ் கிட்ஸ் வாழ்க்கையை மிஸ் பண்ணும் சுப்ரமணியபுரம் ஸ்வாதி ரெட்டி

போலி ட்விட்டர் கணக்கு பற்றி புகார் தெரிவித்துள்ள ஸ்வாதி ரெட்டி, எதற்கு இத்தனை சமூக வலைத்தளம், 90களில் நிம்மதியாக இருந்தோம் என கூறியுள்ளார்.

Samayam Tamil 6 May 2020, 11:57 am
ட்விட்டரில் போலி கணக்குகள் பிரச்சனை காலமா காலமாக நீடித்து வரும் பிரச்சனை. பிரபலங்களின் பெயர்களை பயன்படுத்தி பல குழப்பங்களை ஏற்படுத்தும் விஷமிகள் அதிகம் இருக்கின்றனர்.
Samayam Tamil Swathi Reddy


நேற்று காமெடியன் செந்தில் ட்விட்டரில் இணைந்துவிட்டார் என கூறி ஒரு அறிக்கை வைரலானது. ஆனால் அது போலியான ட்விட்டர் கணக்கு என்பது பின்னர் தான் தெரியவந்தது.

இந்நிலையில் சுப்ரமணியபுரம், போராளி போன்ற பல தமிழ் படங்களில் நடித்துள்ள நடிகை ஸ்வாதி ரெட்டி தனது பெயரில் இருக்கும் போலி ட்விட்டர் கணக்கு பற்றி புகார் கூறியுள்ளார்.

இது பற்றி ஸ்வாதி இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது..

"@SwathiReddyOffl என்ற ட்விட்டர் ஐடி என்னுடையது அல்ல. நான் ட்விட்டரில் இல்லை. இணையும் எண்ணமும் இல்லை. நான் பேஸ்புக் பயன்படுத்துவது இல்லை. அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கம் ஒன்று உள்ளது. அதை மற்றொருவர் பார்த்துக்கொள்கிறார்."

"நான் ஏன் இன்ஸ்டாகிராமில் இன்னும் இருக்கிறேன் என தெரியவில்லை. இதையெல்லாம் கூறுவதற்காக கூட இருக்கலாம். போலி ட்விட்டர் கணக்கு பற்றி என் கவனத்திற்கு கொன்று வந்தவர்களுக்கு நன்றி. அந்த கணக்கு போலியானது என நீங்கள் Report செய்யுங்கள்."

"போலி கணக்கு, போலி செய்திகள், போலியான உறவுகள், போலியான புகைப்படங்கள். என்னை மீண்டும் 90களிலேயே கொண்டு சென்று விட்டுவிடுங்கள். ஒரு லேண்ட் லைன் இருந்தால் நன்றாக பேசலாம், சிறிய மழை பெய்தாலும் கரெண்ட் கட், quarantine என்றால் தான் மற்றவர்களுடன் பழக நேரம் என்பது இல்லை, ஐஸ் கிரீம் மற்றும் முட்டை பப்ஸ் இருந்தால் போதும் நண்பர்களுடன் இருக்க, தூர்தர்ஷன் மட்டுமே போதுமானதாக இருந்தது" என ஸ்வாதி ரெட்டி தெரிவித்துள்ளார்.

View this post on Instagram Checked Instagram today after a week and it’s this, @SwathiReddyOffl Twitter handle is NOT mine. Am NOT on Twitter. I never will be. Am NOT on Facebook. I quit it in 2011. ( I have a page handled by someone else, which is dormant ) And. I don’t know why am still on Instagram. Maybe it provides a voice to say the below. Those of you who brought it to my notice, thank you. This account keeps returning and coming to my notice. ( who are you boss? #Darr ) If you have Twitter and the energy, then please flag it, I have not had much power over what’s written and said about me in the past. I know this shouldn’t matter, it’s not a big deal, am not so relevant also currently blah blah but home girl is just tired of fake. I don’t understand the patience to be a fake me when the real me is not able to be herself completely online. Fake profiles, Fake articles, fake posts, fake relationship standards, fake images, fake positive. Take me back to the 90s where a landline ensured more quality conversations, power cuts because of a drizzle and not a quarantine meant bonding, softy ice cream and egg puffs was standard socialising and Doordarshan was enough stimulation. #Uff #Lol A post shared by Swathi (@swati194) on May 5, 2020 at 3:48am PDT

அடுத்த செய்தி

டிரெண்டிங்