ஆப்நகரம்

இப்படி ஒரு விஷயம் இருப்பது தெரியாம ஹேர்கலர் பண்ணிட்டேன்: டாப்ஸி

டாப்ஸி வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

Samayam Tamil 2 Apr 2020, 4:26 pm
கொரோனா வைரஸ் லாக்டவுன் சமயத்தில் வீட்டில் முடங்கி இருக்கும் டாப்ஸி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது வீடியோக்கள், புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அவரது புகைப்படங்களும், வீடியோக்களும் ரசிகர்களை மிகவும் கவர்ந்து வருகிறது. அவரது வாழ்க்கையில் நடைபெற்ற ஃபன்னியான தருணங்களின் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் உரையாடி வருகிறார் டாப்ஸி. இந்நிலையில் அவர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.
Samayam Tamil tapsee


டாப்ஸி இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோ இதோ

View this post on Instagram A post shared by Taapsee Pannu (@taapsee) on Apr 1, 2020 at 10:45pm PDT

டாப்ஸி வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

என்னுடைய தலைமுடி எக்ஸ்பெரிமண்ட். என்னுடைய தலைமுடியை எக்ஸ்பெரிமண்ட் செய்வதில் எப்போதுமே எனக்கு அதீத ஆர்வம் இருந்தது. என்னுடைய 12 வது வகுப்பிலிருந்தே முடியை ஸ்ட்ரெய்ட்னிங் செய்துள்ளேன். யாரும் கவனிக்கமாட்டார்கள் என்று நினைத்து செய்தேன். இப்போதுவரைக்கும் செய்கிறேன். சில வருடங்களுக்கு முன்பு முடியை நீல நிறத்தில் கலரிங் செய்தேன். கொஞ்சநாளுக்கு ஜாலியாக இருந்தது. ஆனால் இதை மெய்டெய்ன் செய்வது எத்தனை கடினம் என்பதை பின்னாட்களில் புரிந்துகொண்டேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

டாப்ஸி கடைசியாக தப்பாட் படத்தில் நடித்திருந்தார். அடுத்தாக சபாஷ் மித்து படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக நடிக்கவிருக்கிறார். இது கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜின் பயோபிக் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்