ஆப்நகரம்

நடிப்பு, ஓட்டல், வெட்டிங் பிளானர்... நான் பிஸியா இருக்கேன் - டாப்ஸி!

நடிகை டாப்ஸி நடிப்புடன் ஓட்டல் மற்றும் வெட்டிங் பிளானர் ஆகிய தொழில்களை செய்து வருகிறார்.

Samayam Tamil 4 Sep 2018, 7:38 pm
நடிகை டாப்ஸி நடிப்புடன் ஓட்டல் மற்றும் வெட்டிங் பிளானர் ஆகிய தொழில்களை செய்து வருகிறார்.
Samayam Tamil taapsee


நடிகை டாப்ஸி தமிழில் ‘ஆடுகளம்’ படம் மூலம் அறிமுகமானார். இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். இந்தப் படத்தை வெற்றிமாறன் இயக்கியிருந்தார். இந்தப் படத்தின் மூலம் அவர் பிரபலமானார். அதையடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

தமிழை விட தெலுங்கில்தான் அதிக படங்களில் நடித்தார். அங்கும் பிரபலமானார். இதையடுத்து நடிகை டாப்ஸி பாலிவுட்டிலும் நடித்து தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார். சினிமாவில் நடித்துவரும் நடிகை டாப்ஸி, அதே நேரத்தில் வேறு இரண்டு தொழில்களையும் செய்து வருகிறார்.

தனது தம்பியுடன் சேர்ந்து ஹோட்டல் ஒன்றை நடத்தியுள்ளார். மேலும் தனது தங்கையுடன் இணைந்து திருமண வேலைகளை செய்யும் வெட்டிங் பிளானர் தொழிலும் செய்து வருகிறார். பட வருமானத்தை மட்டும் நம்பியிருக்காமல் பல நடிகைகள் வேறு தொழில் மூலம் வருமானம் ஈட்டிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்