ஆப்நகரம்

Taapsee:அந்த ஷோவுக்கு போற அளவுக்கு என் செக்ஸ் வாழ்க்கை சுவாரஸ்யம் இல்லை: டாப்ஸி யாரை சொல்றார்னு தெரியுதா?

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அளவுக்கு என் செக்ஸ் வாழ்க்கை சுவாரஸ்யமானது இல்லை என்று டாப்ஸி தெரிவித்துள்ளார். அதற்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Samayam Tamil 8 Aug 2022, 2:12 pm
காஃபி வித் கரண் 7 நிகழ்ச்சி குறித்து டாப்ஸி தெரிவித்த கருத்து பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Samayam Tamil taapsee takes a dig at koffee with karan 7
Taapsee:அந்த ஷோவுக்கு போற அளவுக்கு என் செக்ஸ் வாழ்க்கை சுவாரஸ்யம் இல்லை: டாப்ஸி யாரை சொல்றார்னு தெரியுதா?



கரண் ஜோஹர்

பிரபல பாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி காஃபி வித் கரண். அந்த நிகழ்ச்சியின் 7வது சீசன் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. திரையுலக பிரபலங்கள் கரண் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்கள். அவர்களின் செக்ஸ் வாழ்க்கை பற்றி கரண் கேள்வி கேட்பது பலருக்கு பிடிக்கவில்லை.

டாப்ஸி

கரண் ஜோஹரின் நிகழ்ச்சிக்கு டாப்ஸியை இதுவரை அழைத்தது இல்லையாம். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் டாப்ஸியிடம் இது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, கரண் ஜோஹர் நிகழ்ச்சியில் பேசும் அளவுக்கு என் செக்ஸ் வாழ்க்கை சுவராஸ்யமாக இல்லை என்றார்.

விளம்பரம்

தனது தோபாரா படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் தான் டாப்ஸி கரண் ஜோஹர் நிகழ்ச்சி பற்றி பேசினார். பத்திரிகையாளர் ஒருவர் கேட்டதால் அவ்வாறு பதில் அளித்தார். தோபாரா விளம்பர நிகழ்ச்சி நடந்த அறைக்கு பக்கத்து அறையில் காஃபி வித் கரண் 7 நிகழ்ச்சியை விளம்பரம் செய்து கொண்டருந்தார் கரண் ஜோஹர் என்பது குறிப்பிடத்தக்கது.

கரீனா

ஆமீர் கானும், கரீனா கபூரும் அண்மையில் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். அப்பொழுது, குழந்தை பெற்ற பிறகு செக்ஸ் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று கரீனாவிடம் கேட்டார் கரண். அதற்கு கரீனாவோ, இரட்டை குழந்தைகள் வைத்திருக்கும் உங்களுக்கு தெரியாததா என்ன என்று பதில் அளித்தார்.

ஆமீர்

என் செக்ஸ் வாழ்க்கை பற்றி மோசமாக பேசுகிறீர்கள் கரீனா. என் அம்மா இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றார் கரண் ஜோஹர். அதை கேட்ட ஆமீரோ, அப்படி என்றால் அடுத்தவர்களின் செக்ஸ் வாழ்க்கை பற்றி நீங்கள் பேசுவதை உங்களின் அம்மா கண்டுகொள்ள மாட்டாரா என்று கேட்டார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்