ஆப்நகரம்

டப்பிங் பேச சென்னை வந்த தைவான் நடிகர்

ரஜினியின் ‘கபாலி’ படத்திற்கு டப்பிங் பேசுவதற்காக தைவான் நடிகர் தற்போது சென்னை வந்துள்ளார்.

TOI Contributor 13 May 2016, 6:53 pm
ரஜினியின் ‘கபாலி’ படத்திற்கு டப்பிங் பேசுவதற்காக தைவான் நடிகர் தற்போது சென்னை வந்துள்ளார்.
Samayam Tamil taiwan actor coming to chennai for kabali movie dubbing
டப்பிங் பேச சென்னை வந்த தைவான் நடிகர்


ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் ‘கபாலி’. இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கும் தைவான் நடிகர் தற்போது சென்னை வந்திருக்கிறார். ரஜினி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘கபாலி’. ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தை கலைப்புலி தாணு பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானது. இது ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றது. மேலும் யூடியூப்பில் பல சாதனைகளும் படைத்து வருகிறது. தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் அனைவரும் டப்பிங்கை முடித்து வருகின்றனர். கடைசியாக இந்த படத்தில் வில்லன் வேடத்தில் நடித்த தைவான் நடிகர் வின்ஸ்டன் சாவோ மட்டும் டப்பிங் செய்ய வேண்டியிருந்த நிலையில், தற்போது அவர் தைவானில் இருந்து சென்னை வந்துள்ளார்.

‘கபாலி’ படத்தில் சொந்தக்குரலில் டப்பிங் செய்ய வேண்டும் என்று விரும்பிய வின்ஸ்டன் சாவோ, தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்ற சென்னை வந்திருக்கிறார். விரைவில் டப்பிங்கை முடித்து விட்டு தைவான் செல்ல இருக்கிறார். இந்த படத்தில் ரஜினியுடன் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ், உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் ஜூன் அல்லது ஜூலை மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்