ஆப்நகரம்

அரவிந்த் சாமிக்கு ஜோடியாகும் தமன்னா?

சதுரங்க வேட்டையின் இரண்டாம் பாகத்தில் அரவிந்த் சாமியுடன் தமன்னா ஜோடி சேரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

TOI Contributor 3 Sep 2016, 5:00 pm
சதுரங்க வேட்டையின் இரண்டாம் பாகத்தில் அரவிந்த் சாமியுடன் தமன்னா ஜோடி சேரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil tamanna going to pair with aravindhsamy
அரவிந்த் சாமிக்கு ஜோடியாகும் தமன்னா?


இயக்குநர் வினோத் இயக்கத்தில் நடராஜ் நடித்த சதுரங்க வேட்டை திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க படக்குழுவினர் திட்டமிட்டனர். முதலில் நடிகர் சூர்யா சதுரங்க வேட்டை இரண்டாம் பாகத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் கைவிடப்பட்டது. தற்போது நடிகர் அரவிந்த் சாமி சதுரங்க வேட்டை இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளார். இதனிடையே நடிகை தமன்னா அரவிந்த் சாமியுடன் ஜோடி சேர உள்ளார் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

அடுத்த செய்தி

டிரெண்டிங்