ஆப்நகரம்

காதல் காட்சியில் வந்து போவது என் நடிப்பல்ல: அதையும் தாண்டி என்கிறார் தமன்னா!

காதல் காட்சிகளில் மட்டும் வந்து போவது ஒரு நடிகையின் நடிப்பல்ல. ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்க வேண்டும் என நடிகை தமன்னா கூறியுள்ளார்.

TNN 12 Jul 2017, 9:41 am
காதல் காட்சிகளில் மட்டும் வந்து போவது ஒரு நடிகையின் நடிப்பல்ல. ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்க வேண்டும் என நடிகை தமன்னா கூறியுள்ளார்.
Samayam Tamil tamanna says hit is important to me not my character in movie
காதல் காட்சியில் வந்து போவது என் நடிப்பல்ல: அதையும் தாண்டி என்கிறார் தமன்னா!


தமிழ், தெலுங்கு படங்களில் முன்னனி நடிகையாக இருப்பவர் தமன்னா. ‘பாகுபலி’ படத்திற்கு பின்னர் அதிக வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கியுள்ளது. பாகுபலி,தர்மதுரை ஆகிய படங்களில் தன் திறமையை வெளிப்படுத்தியிருந்தார் தமன்னா. தற்போது நயன்தாரா, அனுஷ்கா வரிசையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையில் நடிக்கப் போவதாக தெரிவித்தார்.

தமன்னா கூறியதாவது :
சினிமாவில் கதாநாயகிகள் கவர்ச்சி காட்டவும், காதல் காட்சியில் நடிக்கவும் மட்டும் வந்து போவதல்ல நடிப்பு. ஒரு நடிகை அழகு, கவர்ச்சியை வைத்து மட்டும் வெற்றி பெற்று விட முடியாது. அதையும் தாண்டி தன்னுடைய தனித்திறமையால் நடிப்பை வெளிப்படுத்தினால் தான் சிறந்த நடிகையாக முடியும் என தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்