ஆப்நகரம்

இந்தியன் 2: காஜலுக்கு பதில் நடிக்க போகும் பிரபல ஹீரோயின்!

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் 'இந்தியன் 2' படத்தில் காஜல் அகர்வாலுக்கு பதில் தமன்னா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Samayam Tamil 4 Dec 2021, 1:40 pm
லைகா நிறுவனம் தயாரிப்பில் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் 'இந்தியன் 2' படம் உருவாகி வருகிறது. கொரோனா லாக்டவுன், படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து உள்ளிட்ட காரணங்களால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஒரு வருடத்துக்கும் மேலாக நடக்காமல் தேங்கி நிற்கிறது. இந்நிலையில் 'இந்தியன் 2' படத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .
Samayam Tamil Kamal Haasan - Kajal Aggarwal
Kamal Haasan - Kajal Aggarwal


நீண்ட காலமாக ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் படம் இந்தியன் 2. கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்து 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து கொரோனா, லாக்டவுன் என பல காரணங்களால் படத்தின் வேலைகள் தொடங்கப் படாமலேயே இருந்தன. இதனால் தனது அடுத்தடுத்த படங்கள் பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டார் ஷங்கர்.

இந்நிலையில், இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் சுமூகமான தீர்வு ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் 'இந்தியன்' படப்பிடிப்பு துவங்கும் என கூறப்படுகிறது.

'அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்': மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய கமல் நெகிழ்ச்சி!
இந்நிலையில் இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த காஜல் அகர்வாலுக்கு திருமணமாகி தற்போது அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுவதால் அவர் ’இந்தியன் 2’ படத்தில் இருந்து விலகி உள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின. இதனை தொடர்ந்து காஜல் அகர்வாலுக்கு பதிலாக 'இந்தியன் 2' படத்தில் நடிப்பது யார் என்ற கேள்வி எழுந்தது.

Tamannaah


இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி காஜல் அகர்வாலுக்கு பதில் 'இந்தியன் 2' படத்தில் நடிகை தமன்னா நடிக்க வாப்பு இருப்பதாகவும், அவரது காட்சிகள் மீண்டும் முதலில் இருந்து படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்