ஆப்நகரம்

Tamil Bigg Boss : நடிகை கஸ்தூரியை அடுத்து பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொள்ளும் நடிகை சூசன்!?

விரைவில் வெளியாகவுள்ள பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை கஸ்தூரியை அடுத்து தற்போது நடிகை சூசனும் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 15 Mar 2019, 3:54 pm
விஜய் டிவிவில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி இதுவரை இரண்டு சீசன்கள் முடிந்து விட்டது. அடுத்தது மூன்றாவது சீசன் விரைவில் தொடங்கவுள்ளது. இதற்கு முன் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 1 , சீசன் 2 , என்ற இரண்டு பாகமும் பட்டிதொட்டியெங்கும் பரவியது. இந்த இரண்டையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இது மாபெரும் வெற்றியைப் பெற்றது.
Samayam Tamil soosan


இந்நிலையில், இந்நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம் எப்போது வெளியாகும் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த வேளையில் இந்நிகழ்ச்சியின் தயாரிப்பு நிறுவனமான எண்டிமால் நிறுவனம், தமிழில் இந்த ஆண்டு பிக் பாஸ் 3 வது நிகழ்ச்சி நடத்துவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு சில மாதத்தில் இதற்கான ஒப்பந்தம் போடப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சமீப நாட்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறப் போகும் போட்டியாளர்கள் பற்றிய விபரங்களும் அடிக்கடி கிடைத்துக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 3ல் பிரபல நடிகை கஸ்தூரி பங்கு பெறப் போவதாக தகவல் வந்தது. அவரை அடுத்து தற்போது பிரபல நடிகை சூசன் இடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இவர் ‘மைனா’ படத்தில் வில்லியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்