ஆப்நகரம்

தயாரிப்பாளர்கள் காலவரையரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும்!

தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்கெனவே அறிவித்தபடி காலவரையரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் என சங்கம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 13 Mar 2018, 6:26 pm
தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்கெனவே அறிவித்தபடி காலவரையரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் என சங்கம் அறிவித்துள்ளது.
Samayam Tamil tamil cine industry indefinite strike will continue says producers
தயாரிப்பாளர்கள் காலவரையரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும்!


தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், க்யூப், யு.எப்.ஓ. உள்ளிட்ட டிஜிட்டல் நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக கூறி, கடந்த 1-ம் தேதியில் இருந்து புதுப்படங்கள் எதையும் ரிலீஸ் செய்யாமல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இதனால், கடந்த இரண்டு வாரங்களாக புதுப்படம் எதுவும் வெளியாகாததால், ‘பாகுபலி’, ‘மேயாத மான்’, ‘தெறி’, ‘மெர்சல்’, ‘விக்ரம் வேதா’ என ஏற்கெனவே வெளிவந்த படங்களையே மறுபடியும் வெளியிட்டுள்ளனர்.

அடுத்ததாக, வருகிற 16-ம் தேதி முதல் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படும் என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது. அத்துடன், இசை வெளியீட்டு விழா, பத்திரிகையாளர் சந்திப்பு உள்ளிட்ட சினிமா நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற தயாரிப்பாளர்கள் சங்கக் கூட்டத்தில் ஏற்கெனவே அறிவித்தபடி புதுப்படங்களின் ரிலீஸ் நிறுத்தம் தொடரும் என்றும், திட்டமிட்டபடி 16 ஆம் தேதி முதல் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 23 ஆம் தேதி முதல் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படும் எனவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்