ஆப்நகரம்

Sarkar: ஹீரோயின்களை மறந்த தமிழ் சினிமா: ஒரே விஜய் புராணம் தான்!

தளபதி விஜய் நடிப்பில் உருவான சர்கார் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

Samayam Tamil 7 Nov 2018, 4:23 pm
தளபதி விஜய் நடிப்பில் உருவான சர்கார் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
Samayam Tamil sar


சர்கார்

கத்தி, துப்பாக்கி ஆகிய படங்களைத் தொடர்ந்து தளபதி விஜய் – இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாகியுள்ள படம் சர்கார். தமிழகத்தில் நிலவும், அரசியல் சூழலையும், அரசியல் பின்னணியையும் மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ.கருப்பையா, யோகி பாபு ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் 3,400க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் சர்கார் படம் வெளியாகியுள்ளது. படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்

இந்த நிலையில், சர்கார் படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் மட்டுமே ரசிகர்களிடையே அதிகளவில் பேசப்பட்டு வருகிறது. படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர், நடிகைகளின் கதாபாத்திரம் பேசப்படவில்லை. இது காலம் காலமாக நடந்து வரும் ஒரு நிலைப்பாடு தான். பொதுவாக மாஸ் ஹீரோக்களின் படம் என்றால் அவரைப் பற்றி தான் படம் முழுவதும் பேசப்படுகிறது.

வரலட்சுமி சரத்குமார்

உதாரணமாக, வரலட்சுமி சரத்குமாரின் கோமளவல்லி கதாபாத்திரத்தை எடுத்துக் கொள்ளலாம். இது மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயர். இந்த கதாபாத்திரத்தில் வலம் வந்த வரலட்சுமி, பெற்ற தந்தையை விஷம் வைத்து கொள்ளும் அளவிற்கு கொடுமையான பெண்ணாக வலம் வந்துள்ளார். இது படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளது. ஆனால், இவரது கதாபாத்திரத்தைப் பற்றி யாரும் பேசவில்லை.

கீர்த்தி சுரேஷ்

தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இப்படத்தில் பூத் ஏஜெண்டாக நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். இப்படத்தில் விஜய்க்கு ஆதரவாக நடித்துள்ள இவரது கதாபாத்திரமும் பேசப்படவில்லை. இதற்கு முன்னதாக சாமி 2, சண்டக்கோழி 2 ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

இந்த இரு படங்களும் ஓரளவு கீர்த்தி சுரேஷ்க்கு பேர் கொடுத்துள்ளன. எனினும், இப்படத்திற்கு முன்னதாக வந்த மறைந்த சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்து சாவித்ரியாகவே வாழ்ந்திருந்தார். இப்படம் வசூல் ரீதியாக சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த நடிகை கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரம் பற்றி பேசுவதற்கு தமிழ் சினிமா மறந்துவிட்டதா? என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்