ஆப்நகரம்

கருத்து கந்தசாமி விவேக்கை மறந்த தமிழ் சினிமா!

தமிழ் சினிமா விவேக்கை மறந்து மற்ற நடிகர்களை நாடி வருகிறது.

Samayam Tamil 30 Jul 2018, 8:06 pm
தமிழ் சினிமா விவேக்கை மறந்து மற்ற நடிகர்களை நாடி வருகிறது.
Samayam Tamil vivek.


தமிழ் சினிமாவில், கவுண்டமனி, செந்தில், வடிவேலு வரிசையில் நீங்காத இடம் பிடித்தவர் காமெடி நடிகர் விவேக். தன்னுடைய நகைச்சுவை மூலம், இளைஞர்களை மட்டும் அல்லாமல், பெரியவர்களையும் வியப்பில் ஆழ்த்தியவர். நகைச்சுவை உணர்வோடு, சமூகத்திற்கு நல்ல பல கருத்துக்களையும் கொடுப்பவர். தல அஜித், விஜய், பிரசாந்த், தனுஷ், விக்ரம், சூர்யா, ரஜினிகாந்த், கார்த்தி, மாதவன், சிம்பு என்று பல மாஸ் ஹீரோக்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக இவரது நடிப்பில் சக்க போடு போடு ராஜா படம் வெளியானது. இப்படத்தைத் தொடர்ந்து தற்போது தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் விஸ்வாசம் படத்திலும், எழுமின் படத்திலும் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

இப்போது வரும் தமிழ் படங்களில் விவேக்கையும், அவரது நகைச்சுவையையும் பார்ப்பதில்லை. சினிமா டிரெண்ட் மாற மாற காமெடியன்களும் மாறி வருகின்றனர். தற்போது தமிழ் சினிமாவில், சூரி, யோகி பாபு, ரோபோ சங்கர் ஆகியோர் காமெடியில் கலக்கி வருகின்றனர். அவர்களுக்கு தொடர்ந்து மார்க்கெட் இருப்பதால், விவேக் படத்தில் நடிப்பது குறைந்து வருகிறது. இதன் காரணமாக, அவர் சமூக பணிகளில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்