ஆப்நகரம்

நீதிமன்றம் செல்லும் ரித்திகாவின் ‘மீடூ’ படக்குழு!

நடிகை ரித்திகா நடிப்பில் உருவான ‘மீடூ’ படத்திகு சென்சார் தர அதிகாரிகள் மறுப்பதால் நீதிமன்றம் செல்ல படக்குழு முடிவு செய்துள்ளது.

Samayam Tamil 4 Mar 2019, 6:33 pm
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவர் ரித்திகா. இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘மீடூ’. தற்போது இந்தப் படத்திற்கு சான்றிதழ் தர சென்சார் அதிகாரிகள் மறுத்து வருகின்றனர். இதனால் நீதிமன்றம் செல்ல முடிவு செய்துள்ளது ‘மீடூ’ படக்குழு.
Samayam Tamil rithika


கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உலக அளவில் உருவானது விஸ்வரூபம் எடுத்தது மீடூ இயக்கம். பணியிடங்களில் தங்களுக்குக் கொடுக்கப்படும் பாலியல் தொல்லைகளை நானும் பாதிக்கப்பட்டுள்ளேன் என வெளியே சொல்ல ஆரம்பித்தனர்.

இதையடுத்துக் கடந்த ஆண்டு இந்தியாவில் இந்த இயக்கம் விஸ்வரூபம் எடுத்தது. பாலிவுட் மற்றும் கோலிவுட்டில் உள்ள பல முன்னணிக் கலைஞர்கள் மீது பல நடிகைகள் மற்றும் பெண் தொழில்நுட்பக் கலைஞர்கள் புகார் கூறினர். தமிழில் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயிக் கூறிய புகார்கள் பெரியளவில் விவாதமாக்கப்பட்டன.

இந்த மீடு இயக்கத்தை மையமாக வைத்து நடிகை ரித்திகா நடிப்பில் ‘மீடூ’ என்ற படம் உருவானது. இந்தப் படம் கடந்த ஆண்டே முடிக்கப்பட்டு விட்டபோதும் இன்னும் தணிக்கை சான்றிதழ் அளிக்கப்படாதக் காரணத்தால் வெளியாகாமல் இருக்கிறது.

படத்தில் சில ஆட்சேபமான வசனங்கள் இருப்பதால் தணிக்கைச் சான்றிதழ் மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. படம் ரீவைசிங் கமிட்டிக்கு சென்று அங்கும் அங்கும் சான்றிதழ் பெறாமல் முடங்கியுள்ளது. அதனால் படத்தின் தயாரிப்பாளரான தயாரிப்பாளர் சஜித் குரேஷி நீதிமன்றத்திற்கு செல்ல முடிவு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்