ஆப்நகரம்

தெலுங்கில் அறிமுகமாகும் தமிழ் இசையமைப்பாளர்!

தமிழ் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் என்பவர் தற்போது தெலுங்கு படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

TNN 31 May 2017, 10:49 pm
தமிழ் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் என்பவர் தற்போது தெலுங்கு படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
Samayam Tamil tamil film music director to enter in tollywood
தெலுங்கில் அறிமுகமாகும் தமிழ் இசையமைப்பாளர்!


சென்னையைச் சேர்ந்தவர் லியோன் ஜேம்ஸ். 25 வயது நிரம்பிய இவர், ‘காஞ்சனா 2’, ‘கோ 2’, ‘கவலை வேண்டாம்‘ ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போது, சிலுக்குவார்பட்டி சிங்கம் என்ற படத்துக்கு இசையமைத்து வருகிறார்.

தமிழில் மட்டுமே இசையமைத்து வந்த இவர், தற்போது தெலுங்கில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷண், தமன்னா இருவரும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர்.

இந்த படத்தை பாலிவுட் இயக்குனர் குணால் கோகில் இயக்கவுள்ளார். ‘கோ 2’, ‘கவலை வேண்டாம்‘ படத்தின் பாடல்களைக் கேட்ட தயாரிப்பாளர், தெலுங்குப் படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பை லியோன் ஜேம்ஸ்க்கு கொடுத்துவிட்டார்.

Tamil film music director Leon James to enter in Tollywood.

அடுத்த செய்தி

டிரெண்டிங்