ஆப்நகரம்

தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து பார்த்திபன் திடீர் ராஜினாமா

சென்னை : தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க துணை தலைவர் பதவியை நடிகர் பார்த்திபன் திடீர் ராஜினாமா செய்துள்ளார்.

Samayam Tamil 1 Feb 2019, 11:56 pm

ஹைலைட்ஸ்:

  • தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க துணை தலைவர் பதவியை நடிகர் பார்த்திபன் திடீர் ராஜினாமா.
  • இளையராஜா 75 நிகழ்ச்சி நாளை நடக்க உள்ள நிலையில் பார்த்திபன் ராஜினாமா செய்துள்ளார்.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil R-parthiban
சென்னை : தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க துணை தலைவர் பதவியை நடிகர் பார்த்திபன் திடீர் ராஜினாமா செய்துள்ளார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக நடிகர் விஷால் இருந்து வருகின்றார். துணை தலைவர் பொறுப்பை நடிகரும், டைரக்டருமான பார்த்திபன், பிரகாஷ்ராஜ் வகித்து வருகின்றனர். செயலாளர்களாக கதிரேசன், துரைராஜ், பொருளாளராக எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் இருந்து வருகிறார்கள்.

இந்நிலையில் பார்த்திபன் தனது துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை தயாரிப்பாளர் சங்கத்திற்கு அனுப்பி உள்ளார். ஏன் தயாரிப்பாளர் சங்க துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் என்ற காரணத்தை அதில் குறிப்பிடவில்லை.

இளையராஜா 75 நிகழ்ச்சி நாளை நடக்க உள்ள நிலையில், இன்று தயாரிப்பாளர் சங்க துணைத் தலைவராக இருக்கும் பார்த்திபன் ராஜினாமா செய்திருப்பது பல்வேறு சந்தேகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்