ஆப்நகரம்

மேடையில் விஜய் சேதுபதி பெயரை ஏன் கூறவில்லை... அதுதான் காரணமா?

தமிழ அரசு கலைமாமணி விருது வழங்கும் விழாவிலும் அரசியல் செய்துவிட்டதா என்று பலரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர். ஏனென்றால், நேற்று நடந்த விழாவில் நடிகர் விஜய் சேதுபதியின் பெயரைக் கூட குறிப்பிடவில்லை. ஏன், எதற்காக என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 14 Aug 2019, 3:43 pm
தமிழக அரசின் சார்பில் திரைத்துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு கலைமாமணி விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. நேற்று நடந்த விழாவில் 2011 முதல் 2018 வரையிலான எட்டு ஆண்டுகளுக்கான விருது அறிவிக்கப்பட்டது.
Samayam Tamil Vijay Sethupathi N


வைஜெயந்தி மாலா, நடிகர்கள் கார்த்தி, பிரபுதேவா, விஜய் சேதுபதி, சசிகுமார், விஜய் ஆண்டனி, சந்தானம், பாண்டியராஜன், பிரசன்னா, சூரி, ஸ்ரீகாந்த், தம்பி ராமையா, சரவணன், பொன்வண்ணன், எம்.எஸ்.பாஸ்கர், ராஜீவ், பாண்டு, சிங்கமுத்து, சிவன் சீனிவாசன், ராஜசேகர் என 201 பேருக்கு விருது வழங்கப்பட்டது. இந்த விழா சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

கார்த்தி, விஜய் சேதுபதி, பிரபுதேவா, யுவன் ஆகியோருக்கு கலைமாமணி விருது வழங்கினார் முதல்வர்

விருது அறிவிக்கப்பட்டவர்களில் நடிகர் விஜய் சேதுபதியும் ஒருவர். 2017 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான விருதுக்கு விஜய் சேதுபதி தேர்வு செய்யப்பட்டு இருந்தார். ஆனால், இவரது பெயர் மேடையில் வாசிக்கப்படவில்லை. போக்குவரத்து நெரிசலால் தாமதமாக விழாவிற்கு வந்தார் அதனால்தான் விருது வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

400 கலைஞர்களுக்கு தங்க மோதிரம் அன்புப் பரிசாக வழங்கிய தளபதி!

தாமதமாகவே வந்து இருக்கட்டும். ஆனால், 2017ல் விருது வாங்கியவர்கள் பட்டியலில் விஜய் சேதுபதி பெயர் இருக்கும். அதை வாசித்து இருக்க வேண்டும். விருது வாங்க வருகிறார், வரவில்லை என்பது இரண்டாம் பட்சம். ஏன் அவரது பெயர் மேடையில் கூறப்படவில்லை என்ற கருத்தும் எழுந்துள்ளது.

விருது வழங்கும் விழாக்களில் நாமே கூட கேட்டு இருக்கிறோம். விருது வாங்க உரியவர்கள் வரவில்லை என்றால், அதற்கான காரணத்தைக் கூறுவார்கள். அதுமாதிரி எந்தக் காரணங்களும் கூறப்படவில்லை.

தேசிய விருதுக்கு எதிராக குரல் உயர்த்திய தமிழ் கலைஞர்கள்!

சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்று இருந்த விஜய் சேதுபதி ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது குறித்து விமர்சனம் செய்து இருந்தார். இது தமிழகத்தில் பெரிய அளவில் எதிரொலித்து இருந்தது.

ஆஸ்திரேலியாவில் நடந்த இந்திய திரைப்பட விழாவில், சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்ததற்கான சிறந்த நடிகர் விருது விஜய் சேதுபதிக்கு அளிக்கப்பட்டது. அதை வாங்க சென்றபோது, உள்ளூர் வானொலி ஒன்றுக்கு அளித்திருந்த பேட்டியில், ''அந்தந்த பகுதி பிரச்சனையில் அந்தந்த மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று பெரியாரே தெரிவித்துள்ளார். அடுத்தவர் விஷயத்தில் அக்கறை செலுத்தலாம். ஆனால் ஆளுமை செலுத்தக் கூடாது'' என்று தெரிவித்து இருந்தார்.

இதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடுமையான கண்டனம் தெரிவித்து இருந்தார். இதன் எதிரொலியாக மேடையில் விஜய் சேதுபதியின் பெயரை, 'வேண்டும் என்றே' குறிப்பிடவில்லையா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.மத்திய அரசு மனது நோகாமல் தமிழக ஆளும் கட்சி பார்த்துக் கொள்வதைப் போல, இதிலும் நடந்து கொண்டதா என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்