ஆப்நகரம்

யார்கிட்ட, முடியுமா?: தமிழ் ராக்கர்ஸுக்கு சவால் விடும் ரஜினி 'தர்பார்' ரசிகர்கள்

தர்பார் படத்தை தமிழ் ராக்கர்ஸால் எதுவும் செய்ய முடியாது என்று ரஜினி ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Samayam Tamil 7 Jan 2020, 11:46 am
ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள தர்பார் படம் வரும் 9ம் தேதி ரிலீஸாக உள்ளது. படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். படத்தை பிரமாண்டமாக விளம்பரம் செய்து கொண்டிருக்கிறது லைகா நிறுவனம்.
Samayam Tamil darbar rajinikanth


தர்பார் உலகம் முழுவதும் 7 ஆயிரம் ஸ்கிரீன்களில் திரையிடப்பட உள்ளது. இந்நிலையில் தர்பார் படம் ரிலீஸான உடனே அது தமிழ் ராக்கர்ஸில் வந்துவிடும் என்ற அச்சம் உள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியான ரஜினியின் பேட்ட படத்தை ரிலீஸான சில மணிநேரத்தில் ஆன்லைனில் கசியவிட்டது தமிழ் ராக்கர்ஸ்.

இந்நிலையில் தர்பார் படத்தையும் சூட்டோடு சூடாக தமிழ் ராக்கர்ஸ் கசியவிடும் என்று சமூக வலைதளங்களில் பேச்சாக உள்ளது. தர்பார் தமிழ் ராக்கர்ஸில் கசிந்தாலும் ஒரு பிரச்சனையும் இல்லை என்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.

Darbar ரஜினி கட்அவுட்டுக்கு ஹெலிகாப்டரில் மலர் தூவப் போகும் ரசிகாஸ்?

முழுப்படமும் அதுவும் ஹெச்.டி. பிரிண்ட்டில் கசிந்தாலும் அதை தியேட்டருக்கு சென்று பல முறை பார்க்க நாங்கள் இருக்கிறோம். அதனால் தமிழ் ராக்கர்ஸால் தர்பார் வசூலில் கையை வைக்க முடியாது என்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.

இந்த தமிழ் ராக்கர்ஸ் அட்டூழியத்தை ஒழிக்க ரஜினியால் கூட முடியவில்லையே. தமிழ் ராக்கர்ஸை அழிக்க ஹீரோ அல்ல சூப்பர் ஸ்டார் அல்ல அதற்கும் மேல் ஒருவர் தேவைப்படுகிறார். அவர் என்று வருவாரோ என்று நெட்டிசன்கள் கலாய்க்கிறார்கள்.

சிம்பு மாதிரி ஆளை நான் பார்த்ததே இல்லை: மஹா பட இயக்குநர்

அடுத்த செய்தி

டிரெண்டிங்