ஆப்நகரம்

மெர்சலாக்கும் தமிழ் ராக்கர்ஸின் புத்தம் புது அறிவிப்பு

பல சோதனைகளைக் கடந்து, திட்டமிட்ட படி நாளை தீபாவளியன்று ‘மெர்சல்’ திரைப்படம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

TNN 26 Sep 2018, 7:51 pm
பல சோதனைகளைக் கடந்து, திட்டமிட்ட படி நாளை தீபாவளியன்று ‘மெர்சல்’ திரைப்படம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
Samayam Tamil மெர்சலாக்கும் தமிழ் ராக்கர்ஸின் புத்தம் புது அறிவிப்பு


இந்நிலையில், மீண்டும் ‘மெர்சல்’ படத்திற்கு சோதனை கொடுக்கும் விதமாக தமிழ் ராக்கர்ஸின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆம், பல்வேறு முன்னனி நடிகர்களின் படத்திற்கு சவால் விட்டு வந்த தமிழ் ராக்கர்ஸ், படம் வெளியான அன்றே இணையதளத்தில் வெளியிட்டு வந்தது.

இந்நிலையில், 2.0 படத்தை முடிந்தால் வெளியிடுபார்ப்போம் என ஷங்கர் கூறியிருந்தார்.
தீபாவளிக்கு மெர்சல் படம் வெளியாகும் என்ற பரபரப்பிற்கு இடையே முதல் 3 நாட்களுக்கு இணையதளத்தில் வெளியிடமாட்டோம் என தமிழ் ராக்கர்ஸ் கூறியதாக செய்தி வெளியானது. இந்நிலையில் பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம். ‘மெர்சல்’ படம் வெளியாகும் அதே நாள் HD தரத்தில் எங்கள் தமிழ் ராக்கர்ஸில் வெளியிடப்படும்.

மெர்சல் சினிமா விமர்சனம்

நாங்க ‘சொன்னா செய்வோம்’, ‘சொன்னதை செய்வோம்’ என்று தமிழ் ராக்கர்ஸ் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.

Don't Believe Fake News 😀#Mersal Movie Release On a Same Day In #TamilRockers with HD Print 😎 Sonna Seivom..Sonatha Seivom...#TamilRockers — TamilRockers (@TamilRockersTR) October 14, 2017

சொன்னதை செய்த தமிழ் ராக்கர்ஸ் :
ரசிகர்களில் மாபெரும் ஆதரவால் மிரட்டி வரும் மெர்சல் படத்தை, மெர்சலாக்கும் விதமாக தமிழ் ராக்கர்ஸ் தற்போது சொன்னைதை செய்வோம் என்பதற்கு ஏற்றாற்போல, மெர்சல் படத்திற்கான டொரண்ட் லிங் கொடுத்துள்ளது.

*Disclaimer: டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமம் (சமயம்) திருட்டுதனமாக திரைப்படங்களை பதிவிறக்கம் செய்யும் இணையதளங்களை என்றுமே ஆதரிக்காது. இது செய்திக்காக மட்டுமே விளம்பரத்திற்கு அல்ல.

அடுத்த செய்தி

டிரெண்டிங்