ஆப்நகரம்

Pattas அய்யோ, தனுஷ் பட்ட கஷ்டம் எல்லாம் இப்படி வீணாப் போச்சே

தனுஷின் பட்டாஸ் படம் ரிலீஸான வேகத்தில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் கசிந்துவிட்டது.

Samayam Tamil 15 Jan 2020, 2:24 pm
தனுஷின் பட்டாஸ் படம் ரிலீஸான வேகத்தில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் கசிந்துவிட்டது.
Samayam Tamil tamil rockers leak dhanush starrer pattas movie online
Pattas அய்யோ, தனுஷ் பட்ட கஷ்டம் எல்லாம் இப்படி வீணாப் போச்சே


பட்டாஸ்

கொடி படத்தை அடுத்து துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ் அப்பா, மகனாக நடித்த பட்டாஸ் படம் பொங்கல் ஸ்பெஷலாக இன்று ரிலீஸானது. படத்தை பார்த்த அனைவரும் தனுஷ் நடிப்பு வேற லெவல் என்று பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். தாடி வைத்திருந்தால் அப்பா திரவியம்பெருமாள், தாடி-மீசை இல்லாவிட்டால் மகன் பட்டாஸ் என்கிற சக்தி என்று இல்லாமல் நடிப்பால் வித்தியாசம் காட்டியுள்ளார் தனுஷ்.

தமிழ் ராக்கர்ஸ்

தனுஷ் கஷ்டப்பட்டு நடித்த பட்டாஸ் படம் வெளியான சில மணிநேரத்தில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வந்துவிட்டது. அந்த இணையதளத்தில் இருந்து பலரும் படத்தை டவுன்லோடு செய்துள்ளனர். முன்னதாக கடந்த 9ம் தேதி வெளியான ரஜினிகாந்தின் தர்பார் படத்தையும் ரிலீஸ் நாள் அன்றே கசியவிட்டது தமிழ் ராக்கர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

தயாரிப்பாளர்கள் கதறல்

தற்போது எல்லாம் புதுப்படங்களுக்கு ரிலீஸ் தேதியை தயாரிப்பாளரும், இயக்குநரும் குறிக்கும்போதே அதே நாளில் ஆன்லைனில் கசிய விடுவது என்று தமிழ் ராக்கர்ஸும் முடிவு செய்கிறது போன்று. கஷ்டப்பட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் தான் தமிழ் ராக்கர்ஸால் ரத்தக் கண்ணீர் வடிக்கிறார்கள். இந்த பிரச்சனைக்கு யாரால், எப்பொழுது தீர்வு வரும் என்றே தெரியவில்லை.

சினேகா

பட்டாஸ் படத்தில் தனுஷ் மட்டும் அல்ல சினேகாவும் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ளார். வழக்கமாக தனுஷ் படத்தை பார்ப்பவர்கள் அவரின் நடிப்பை பற்றி மட்டும் தான் பேசுவார்கள். ஆனால் பட்டாஸை பார்ப்பவர்கள் தனுஷோடு சேர்த்து சினேகாவையும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். அந்த அளவுக்கு சினேகா சிறப்பாக நடித்துள்ளார். மற்றொரு ஹீரோயினான மெஹ்ரீன் பிர்சாதா நடிப்பில் சொதப்பல் என்று விமர்சனம் எழுந்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்