ஆப்நகரம்

அடப்பாவமே, கவுதம் மேனன்-தனுஷுக்கு அதற்குள் இப்படி ஒரு சோதனையா?

தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா படம் அதற்குள் ஆன்லைனில் கசிந்துவிட்டது.

Samayam Tamil 29 Nov 2019, 12:25 pm
கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சசிகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ள எனை நோக்கி பாயும் தோட்டா படம் இன்று ரிலீஸாகியுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வர வேண்டிய படம் நிதிப் பிரச்சனையால் தற்போது தான் வெளியாகியுள்ளது.
Samayam Tamil dhanush


இந்நிலையில் படம் ரிலீஸான சில மணிநேரத்தில் அதை ஆன்லைனில் கசியவிட்டுள்ளது தமிழ் ராக்கர்ஸ். முதல் நாள் முதல் காட்சியை பார்த்துவிட்டு தியேட்டரில் இருந்து வெளியே வந்தவர்கள் கதை பற்றி பேசி முடிக்கும் முன்பே முழுப் படமும் தமிழ் ராக்கர்ஸில் வெளியாகியுள்ளது.

தமிழ் ராக்கர்ஸின் இந்த காரியத்தால் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் வசூல் பாதிக்கப்படும் என்று அஞ்சப்படுகிறது. தியேட்டரில் தான் படத்தை பார்ப்பேன் என்று இருப்பவர்களை பற்றி பிரச்சனை இல்லை. ஆனால் வார இறுதி நாட்களில் தியேட்டர்களுக்கு செல்ல நினைத்தவர்கள் கூட தற்போது அதை ஆன்லைனில் டவுன்லோடு செய்யத் துவங்கிவிட்டனர்.

தனுஷுக்கு ஒரு ஹிட் பார்சல்: எனை நோக்கி பாயும் தோட்டா ட்விட்டர் விமர்சனம்

படத்தை டவுன்லோடு செய்பவர்கள் தாராள மனதாக அந்த லிங்க்கை தங்களின் நட்பு வட்டாரத்திற்கு அனுப்பி வைத்து வசூலில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த தமிழ் ராக்கர்ஸ் தொல்லை எப்பொழுது தான் தீருமோ?

ஒரு படம் ரிலீஸானால் அதன் பெயரோடு தமிழ் ராக்கர்ஸ் பெயரை சேர்த்து கூகுளில் தேடும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Gautham Menon கோபமா, யார் சொன்னது?: ராத்திரியோடு ராத்திரியாக தனுஷ் செய்த காரியம்

அடுத்த செய்தி

டிரெண்டிங்