ஆப்நகரம்

நடிகர் சூர்யாவுக்கு நீட் குறித்து என்ன தெரியும்? - தமிழிசை

நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யாவுக்கு என்ன தெரியும், தேவையில்லாமல் தவறான கருத்துக்களை பரப்புகின்றனர் என தமிழிசை கூறியுள்ளார்.

TNN 9 Sep 2017, 4:37 pm
சென்னை : நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யாவுக்கு என்ன தெரியும், தேவையில்லாமல் தவறான கருத்துக்களை பரப்புகின்றனர் என தமிழிசை கூறியுள்ளார்.
Samayam Tamil tamilisai questions actor suriya about neet opinion
நடிகர் சூர்யாவுக்கு நீட் குறித்து என்ன தெரியும்? - தமிழிசை


நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டம் வலுத்து வருகின்றது. இதுகுறித்து தமிழிசை பேசியதாவது :

மாணவி அனிதா மரணத்திற்கு பின், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விலக்கு கோரியும் தமிழகம் முழுவதும் போராட்டம் அதிகமாகியுள்ளது. இதுகுறித்து நடிகர்கள் பலர் கருத்து தெரிவிக்கின்றனர். மகிழ்ச்சியளிக்கின்றது. இருப்பினும் தவறான கருத்துக்களை மாணவர்கள் மத்தியில் பரப்பிவருவது வருத்தமளிக்கின்றது.

நடிகர் சூர்யா கோடிகளுக்கு நடித்து வந்த போது, நாங்கள் தெருக்கோடிகளில் பணியாற்றிக் கொண்டிருந்தோம். இவர்கள் போன்றோரை மக்கள் பலரும் கண்காணித்து, பின்பற்றி வருகின்றனர். இவர்கள் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை தெரிவிப்பதை முதலில் நிறுத்த வேண்டும்.

நீட் தேர்வுக்கு முன்னர் எத்தனை ஏழை மாணவர்கள் மருத்துவ கல்லூரியில் சேர்ந்தார்கள் என்ற கணக்கு உள்ளதா என கேள்வி எழுப்பியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்