ஆப்நகரம்

காவிரி வேண்டும்; ஸ்டெர்லைட் வேண்டாம்; முழக்கத்துடன் போராட்டக் களத்திற்கு கிளம்பிய ரஜினிகாந்த்!

தமிழக மக்களின் கோபத்திற்கும், அதிருப்திற்கும் மத்திய அரசு ஆளாக நேரிடும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 8 Apr 2018, 11:47 am
சென்னை: தமிழக மக்களின் கோபத்திற்கும், அதிருப்திற்கும் மத்திய அரசு ஆளாக நேரிடும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil Rajinikanth
ரஜினிகாந்த்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திரையுலகினர் சார்பில் மவுன போராட்டம் நடைபெற்று வருகிறது. அதில் கலந்து கொள்வதற்கு நடிகர் ரஜினிகாந்த், போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து புறப்பட்டார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என நீதிமன்ற தீர்ப்பில் உறுதியாக கூறப்பட்டுள்ளது. வாரியம் அமைக்காவிடில் அனைத்து தமிழர்களின் கோபத்திற்கும், அதிருப்திக்கும் மத்திய அரசு ஆளாகும்.

பஞ்ச பூதங்களில் ஏதாவது ஒன்று கெட்டுப்போனாலும் உலகம் அழிந்துவிடும். பல கோடி வருமானம் கிடைத்தாலும் பாதிப்பு ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலை தேவையில்லை. மண், தண்ணீர், காற்றை மாசுபடுத்த விடக்கூடாது.

என்னுடைய எதிரி கமல் இல்லை. ஏழ்மை, லஞ்சம், வேலையின்மைதான் எனது எதிரி. காவிரிக்காக தமிழகமே போராடும் போது, ஐபிஎல் போட்டியை நிறுத்தினால் நல்லதுதான்.

இருப்பினும் மக்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்த ஐபிஎல்லில் சென்னை அணி வீரர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாட வேண்டும் என்பது எனது விருப்பம். காவிரிக்காக போராடும் சூழலில் கர்நாடகத்தை சேர்ந்தவரை துணைவேந்தராக நியமித்திருக்க வேண்டாம்.

கர்நாடகாவில் எனது படத்தை வெளியிடாமல் தடுத்தால் தயாரிப்பாளர்கள், மாநில அரசு பார்த்துக் கொள்ளும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

Tamilnadu People wont forgive Central Govt says Rajinikanth.

அடுத்த செய்தி

டிரெண்டிங்