ஆப்நகரம்

விஷாலுக்கு தமிழ் ராக்கர்ஸ் நேரடி சவால்?

நடிகர் விஷால் படங்களை ஒரு மணிநேரத்தில் ரிலீஸ் ஆகும் என்று தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தின் அட்மின் நேரடி சவால் விடுவதாக ஆடியோ ஒன்று வைரலாகப் பரவி வருகிறது.

TNN 26 Sep 2018, 8:21 pm
நடிகர் விஷால் படங்களை ஒரு மணிநேரத்தில் ரிலீஸ் ஆகும் என்று தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தின் அட்மின் நேரடி சவால் விடுவதாக ஆடியோ ஒன்று வைரலாகப் பரவி வருகிறது.
Samayam Tamil விஷாலுக்கு தமிழ் ராக்கர்ஸ் நேரடி சவால்?


புதிய திரைப்படங்களை திருட்டுத்தனமாக இணையதளத்தில் வெளியட்டு பெயர் பெற்றது தமிழ் ராக்கர்ஸ் இணையதளம். இந்த இணையதளத்திற்கு எதிராக தொடர்ந்து திரையுலகின்றனர் போராடி வருகின்றனர். இருப்பினும், காவல்துறையிடம் கூட சிக்காமல் டிமிக்கி கொடுக்கும் அந்த இணையதளத்தின் அட்மின் விஷாலுக்கு தற்போது நேரடி சவால் விடுத்துள்ளதாக ஆடியோ ஒன்று பகிரப்பட்டு வருகிறது.

தமிழ் ராக்கர்ஸ் அட்மின் விஷாலின் திரைப்படங்களை வெளியான ஒரு மணிநேரத்திலேயே வெளியிடுவதாகவும் முடிந்தால் தடுத்தப்பார்க்குமாறு மிரட்டல் விடுப்பது போல ஒருவர் பேசும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.



ஒரு பையன் சினிமாவில் ஹீரோ ஆகும் கனவுடன் வந்தபோது திரைத்துறையினர் பல லட்சம் ரூபாய் கொடுத்தால் தான் வாய்ப்பு தருவதாகக் கூறியதால், மனம் வெறுத்து Tamilgun.com மற்றும் Tamilrockers.com ஆகிய இணையதளங்களைத் தொடங்கியாதாவும் விஜய் ரசிகரான அந்த பையன் விஜய் படங்களை இரண்டு மூன்று நாட்கள் கழித்தே வெளியிடுவான் என்றும் அந்த ஆடியோவில் கூறப்படுகிறது.

நடிகர் விஷால் நடித்துள்ள துப்பறிவாளன் படத்தின் உயர்தர பதிப்பை ரூ.50 லட்சம் கொடுத்து தமிழ் ராக்கர்ஸ் வாங்கிவிட்டதாகவும் அந் ஆடியோ தெரிவிக்கிறது. இந்த ஆடியோவை தமிழ் ராக்கர்ஸ் பெயரைக் குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.

*Disclaimer: டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமம் (சமயம்) திருட்டுதனமாக திரைப்படங்களை பதிவிறக்கம் செய்யும் இணையதளங்களை என்றுமே ஆதரிக்காது. இது செய்திக்காக மட்டுமே விளம்பரத்திற்கு அல்ல.

அடுத்த செய்தி

டிரெண்டிங்