ஆப்நகரம்

புத்தாண்டுனா கமல், குடியரசு தினம்னா அர்ஜுன்: ஜெய் ஹிந்த்

குடியரசு தினம் என்றால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது அர்ஜுன் பட பாடல் தான்.

Samayam Tamil 25 Jan 2020, 5:04 pm
குடியரசு தினத்தை கொண்டாட நாடே தயாராகிக் கொண்டிருக்கிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு டிவி சேனல்களில் சிறப்பு படங்கள் ஒளிபரப்பப்பட உள்ளன. அதிலும் குறிப்பாக ஒரு சேனலில் காமத்தை காதல் என்று சொன்ன படத்தை நாளை ஒளிபரப்புகிறார்கள்.
Samayam Tamil republic day


குடியரசு தினத்திற்கும், இந்த படத்திற்கும் என்னய்யா தொடர்பு என்று மக்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். சரி விஷயத்திற்கு வருவோம். புத்தாண்டு என்றால் கமல் ஹாஸனின் சகலகலா வல்லவன் படத்தில் வந்த ஹேப்பி நியூ இயர் பாடலை தான் பலரும் பார்ப்பார்கள்.

அதே போன்று குடியரசு தினம் என்றால் அர்ஜுன் நடித்த ஜெய்ஹிந்த் படத்தில் வந்த தாயின் மணிக்கொடி சொல்லுது ஜெய்ஹிந்த் பாடல் தான் பல இடங்களில் கேட்கும். தேசியக் கொடியை போற்றும் பல பாடல்கள் இருந்தாலும் ரசிகர்களை இன்றும் கவர்ந்த பாடலாக அது உள்ளது.



சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான பாரதவிலாஸ் படத்தில் வந்த இந்திய நாடு என் நாடு பாடலை பார்க்கும்போதும் பெருமையாக இருக்கும். சிவாஜி வந்தே மாதரம், வந்தே மாதரம் என்று மீண்டும் மீண்டும் கூற நம்மையும் சேர்ந்து சொல்ல வைக்கும் பாடல் அது.


மேலும் வேற்றுமையில் ஒற்றுமை தான் நம் பாரதம் என்பதை அழகாக காட்டும் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த எவர்கிரீன் தேசிய பற்று பாடல்களுடன் குடியரசு தினத்தை கொண்டாடுவோம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்