ஆப்நகரம்

பிக் பாஸ் ஸ்டைலில் புதிய அறிவிப்பை வெளியிட்ட தமிழ்படம் 2!!

ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் சிவாவின் ‘தமிழ் படம் 2’ இன் இசை வரும் ஜூன் 29 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 27 Jun 2018, 12:11 pm
ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் சிவாவின் ‘தமிழ் படம் 2’ இன் இசை வரும் ஜூன் 29 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil பிக் பாஸ் ஸ்டைலில் புதிய அறிவிப்பை வெளியிட்ட தமிழ்படம் 2!!
பிக் பாஸ் ஸ்டைலில் புதிய அறிவிப்பை வெளியிட்ட தமிழ்படம் 2!!


சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா நடித்து வெளியான திரைப்படம் ‘தமிழ்படம்’. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.

முந்தைய படத்தில் தமிழ்படங்களின் லாஜிக்கை கலாய்த்த சிவா-சி.எஸ்.அமுதன் கூட்டணி, இந்தப் படத்தில் அரசியல்வாதிகள், நடிகர்கள், முதல்வர், சூப்பர்ஸ்டார் என எல்லோரையும் படம் வெளியாவதற்கு முன்பாகவே கலாய்த்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் இப்படத்தின் டீசர் வெளியாக, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேபோல், நேற்று வெளியான இந்தப் படத்தின் சிங்கிள் டிராக்குக்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

இதைத்தொடர்ந்து, இப்படத்தின் பாடல்கள் வரும் ஜூன் 29 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து படக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில் ‘எங்கள் இசை உங்களை நோக்கி. ஓடவும் முடியாது, ஒழியவும் முடியாது’ என பிக்பாஸ் ஸ்டைலில் நக்கல் செய்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்