ஆப்நகரம்

சச்சின் படத்துக்கு அரசு வரிவிலக்கு!

சச்சின் படத்திற்கு ஒடிசா அரசு வரிவிலக்கு அளித்துள்ளது.

TNN 26 May 2017, 4:10 pm
சச்சின் படத்திற்கு ஒடிசா அரசு வரிவிலக்கு அளித்துள்ளது.
Samayam Tamil tax exemption for sachi movie
சச்சின் படத்துக்கு அரசு வரிவிலக்கு!


எல்லோருக்கும் பிடித்த இந்திய கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர், தன் வாழ்க்கை வரலாறு படம் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார். இதில் சச்சின் கேரக்டரில் அவரது நடித்திருக்கிறார். “சச்சின் ஏ பில்லியன் டிரீம்ஸ்” என்ற பெயரில் உருவாகியுள்ள இப்படத்தை ஜேம்ஸ் எர்ஸ்கின் இயக்கியிருக்கிறார்.

இந்தப் படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. தனது முதல்படத்தை ஊர் ஊராக சென்று புரொமோஷன் செய்திருக்கிறார் சச்சின். இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் சச்சின் படத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களின் முன்மாதிரியாக இருப்பவர் சச்சின். அவரது படத்தை ரசிகர்கள் அனைவரும் தியேட்டரில் சென்று பார்க்கும் வகையில் படத்திற்கு வரிவிலக்கு அளித்திருப்பதாக ஒடிசா மாநில நிதியமைச்சர் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்