ஆப்நகரம்

சச்சின் நடித்துள்ள படத்திற்கு வரிவிலக்கு!

சச்சின் நடித்துள்ள படத்திற்கு வரிவிலக்கு!

TOI Contributor 24 May 2017, 1:11 am
சச்சின் நடித்து அவரது கதையை கருவாக வைத்து எடுக்கப்பட்டுள்ள சச்சின் எ பில்லியன் டிரீம் படத்திற்கு ஒடிஷா அரசு வரிவிலக்கு அறிவித்துள்ளது.
Samayam Tamil tax free for sachins movie
சச்சின் நடித்துள்ள படத்திற்கு வரிவிலக்கு!


கிரிக்கெட் கடவுள் என்று வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் நடித்துள்ள “சச்சின் எ பில்லியன் டிரீம்” திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்தப்படத்தை ஜேம்ஸ் எர்ஸ்கைன் இயக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். விளையாட்டு களத்தில் நாம் பார்த்த சச்சின் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள், அவர் கிரிக்கெட் விளையாடிய போது நிகழந்த சம்பவங்கள் என்று இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதால் படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. வருகிற வெள்ளிக்கிழமை திரைப்படம் வெளியாகிறது.

இந்நிலையில் இந்தப்படத்திற்கு ஒடிஷா அரசு வரி விலக்கு அளித்துள்ளது. ஏற்கனவே மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநிலங்கள் வரிவிலக்கு அளித்துள்ள நிலையில் தற்போது ஒடிஷாவும் வரிவிலக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்