ஆப்நகரம்

பவன் கல்யாணின் டுவிட்டர் கணக்கையே ஹேக் செஞ்சுட்டாங்களா? வரிஞ்சுகட்டும் ஜனசேனா

தெலுங்கு சினிமாவின் பவர் ஸ்டார் என்றால் அது பவன் கல்யாண் தான்.

TNN 17 May 2017, 5:52 pm
தெலுங்கு சினிமாவின் பவர் ஸ்டார் என்றால் அது பவன் கல்யாண் தான். தெலுங்கில் அதிக ரசிகர்களை கொண்டவரும் இவர் தான். இவருடைய படம் திரைக்கு வந்துவிட்டாலே போதும் அதுவரை வசூல் கொடுத்த படங்களை பின்னுக்கு தள்ளிவிடும்.
Samayam Tamil telugu actor pawan kalyans twitter account has been hacked
பவன் கல்யாணின் டுவிட்டர் கணக்கையே ஹேக் செஞ்சுட்டாங்களா? வரிஞ்சுகட்டும் ஜனசேனா


தற்போது சினிமா பிரபலங்களின் டுவிட்டர் கணக்கு முடக்கப்படுவதும், அவர்கள் அதனை தெரிவிப்பதும் வழக்கமாகி வருகிறது. அந்த வகையில் தெலுங்கு பவர் ஸ்டார் பவன் கல்யாணும் இணைந்துவிட்டார். கடந்த 2015ம் ஆண்டு டுவிட்டரில் இணைந்தார். அன்று முதல் இன்று வரை டுவீட் பதிவிட்டு வந்தார். கிட்டதட்ட 2 மில்லியன் பாலோயர்ஸை பெற்றிருந்தார்.

இந்நிலையில், பவன் கல்யாணின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக ஜனசேனா கட்சியினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து கூறுகையில், முதலில் பவன் கல்யாணின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுவிட்டது என்று தான் நினைத்தோம். ஆனால், சில விஷமிகளால் அவரது டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த பிரச்சனை தீர்க்கப்படும் என்று கூறியுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்