ஆப்நகரம்

சந்திரபாபு நாயுடு கேரக்டரில் நடிக்கும் ராணா!

ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கேரக்டரில் நடிகர் ராணா ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

Samayam Tamil 9 Aug 2018, 3:15 pm
ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கேரக்டரில் நடிகர் ராணா ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.
Samayam Tamil சந்திரபாபு நாயுடு கேரக்டரில் நடிக்கும் ராணா!


ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவ் வாழ்க்கை வரலாறு தற்போது திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தை என்.டி.ஆரின் மகன் பாலகிருஷ்ணா தயாரிக்கிறார். இந்தப் படத்தில் அப்பா என்.டி.ஆர். கேரக்டரில் அவரது மகன் என்.டி.ஆர். பாலகிருஷ்ணா நடிக்கிறார். என்.டிஆரின் மனைவி கேரக்டரில் நடிகை வித்யாபாலன் நடிக்கிறார். இந்தப் படத்தை தேஜா தெலுங்கில் இயக்கி வருகிறார்.

மேலும் இந்தப் படத்தில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கேரக்டரில் நடிகை ராணா டகுபதி நடிக்கிறார். இதை தனது ட்விட்டர் பக்கத்தில் நாயுடுவாக நடிப்பதில் எனக்கு பெருமை என்று ராணா பதிவிட்டுள்ளார். இந்தப் படம் 2019ல் வெளியாகவுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்