ஆப்நகரம்

விஜய் சேதுபதின்னா ஒய்யாரம், நாங்கன்னா இளக்காரமா?: கொந்தளிக்கும் நடிகர்கள்

விஜய் சேதுபதி தெலுங்கு படங்களில் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ள நிலையில் அக்கட தேசத்து நடிகர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

Samayam Tamil 20 Nov 2019, 1:10 pm
விஜய் சேதுபதி தெலுங்கு படங்களில் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ள நிலையில் அக்கட தேசத்து நடிகர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
Samayam Tamil telugu actors feel like outsiders in tollywood
விஜய் சேதுபதின்னா ஒய்யாரம், நாங்கன்னா இளக்காரமா?: கொந்தளிக்கும் நடிகர்கள்


டோலிவுட்டில் விஜய் சேதுபதி

சயீரா நரசிம்ம ரெட்டி படம் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமான விஜய் சேதுபதிக்கு அங்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அவர் வைஷ்ணவ் தேஜ் நடிக்கும் உப்பேனா படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார். அதற்காக அவருக்கு ரூ. 5 கோடிக்கும் மேல் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். இது தவிர விஜய் சேதுபதி சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் ஏஏ 20 படத்திலும் நடிக்கிறார். அந்த படத்தில் வில்லத்தனம் செய்ய அவருக்கு ரூ. 1.5 கோடி சம்பளமாம். ஏஏ 20 படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க உள்ளது.

வில்லன் சமுத்திரக்கனி

விஜய் சேதுபதி மட்டும் அல்ல பிற தமிழ் நடிகர்கள் மற்றும் பாலிவுட் நடிகர்கள், நடிகைகள் தெலுங்கு படங்களில் நடிப்பது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சமுத்திரக்கனி திரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கும் அல வைகுண்டபுரம்லோ படத்தில் வில்லனாக நடிக்கிறார். மேலும் ரவி தேஜாவின் படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் சமுத்திரக்கனி. அவருக்கும் பெரிய தொகை சம்பளமாக பேசப்பட்டுள்ளதாம். நடிகர்கள் தவிர்த்து கோலிவுட் நடிகைகளும் தெலுங்கு படங்களில் அதிகம் நடிக்கிறார்கள்.

பெரிய தொகை கேட்கும் சஞ்சய் தத்

பொயப்பட்டி சீனு பாலகிருஷ்ணாவை வைத்து இயக்கும் படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்திடம் கேட்க அவர் சம்பளமாக பல கோடிகள் கேட்டுள்ளார். சஞ்சய் தத் சொன்ன தொகையை கேட்டு தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் லைட்டா தலை சுற்றினாலும் சமாளித்துக் கொண்டு கொஞ்சம் பார்த்து பண்ணுங்க சார் என்று தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம். பாலிவுட் நடிகைகள் ஒரு பாட்டுக்கு வந்து குத்தாட்டம் போடவே ரூ. 2 கோடி கேட்டு தயாரிப்பாளர்களை அதிர வைக்கிறார்கள்.

தெலுங்கு நடிகர்கள் வேதனை

இப்படி பிற மாநில நடிகர்கள் தெலுங்கு படங்களில் நடிக்க கோடிக் கணக்கில் சம்பளம் வாங்குவதை பார்த்த தெலுங்கு கலைஞர்கள் கோபம் அடைந்துள்ளனர். பிற மொழி பேசும் நடிகர்களுக்கு நாளுக்கு ரூ. 20 லட்சம் கொடுக்கத் தயாராக இருப்பவர்கள் தெலுங்கு நடிகர்கள் ரூ. 3 லட்சம் கேட்டால் கூட குறைத்துக் கொள்ளுமாறு கூறுகிறார்கள். சொந்த மொழி திரையுலகிலேயே மாற்றான் பிள்ளையை போன்று நடத்துகிறார்களே என்று தெலுங்கு கலைஞர்கள் வருத்தப்பட்டுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்